அமேசானை தீயாக வருத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்கள்- வைரல் காரணம் என்ன தெரியுமா

கடந்த ஆண்டில் நடைபெற்றது போல், இந்த ஆண்டும் அமேசான் நிறுவனம் மாபெரும் சிக்கலைச் சந்தித்துள்ளது.

இந்தியத் தேசிய கோடி அவமானம் தனது தளத்தில் ஹிந்து மதத்தைக் கொச்சை படுத்தும் விதத்திலும், இந்தியத் தேசிய கோடியை அவமானப் படுத்தும் விதத்திலும் இரண்டு சின்னங்களையும் விற்பனை செய்யப்படுவதாகக் குற்றம் சாற்றப்பட்டு டிவிட்டர் பதிவு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது ஹிந்து மதத்தின் சின்னங்கள் அவமானம் டோர் மேட், செருப்பு, காலணிகள், கழிவறை சீட்டர்களில் தேசியக் கொடியின் படம் மற்றும் ஹிந்து மதத்தின் சின்னங்கள் பதிவிடப்பட்டுள்ளது. இதை வன்மையாகக் கண்டித்து அனைவரும் டிவிட்டரில் அமேசானிற்கு எதிராகக் கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர். #boycottamazon அமேசானை புறக்கணிக்கிறோம் #boycottamazon என்ற ஹேஷ்டேக் உடன் டிவீட் செய்யப்பட்டுள்ளது. இந்த பதிவை சுமார் ஒரு மணி நேரத்தில் 5,700 நபர்கள் லைக் செய்து ரீடிவீட் செய்துள்ளனர். தற்பொழுது சமூக வலைத்தளம் முழுதும் இந்த பதிவு வைரல் ஆகி வருகிறது. சிக்கலில் அமேசான் கடந்த ஆண்டில் மகாத்மா காந்தியின் படம் செருப்பில் பதிவிடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டில் இப்படி ஒரு சிக்கலில் அமேசான் சிக்கியுள்ளது. கடந்த ஆண்டில் இதுபோன்ற ஒரு சர்ச்சையில் ஸ்னாப்டீல் நிறுவனமும் சிக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

எழுதியவர் : ஷரத் சந்தர் (17-May-19, 4:55 am)
பார்வை : 42

சிறந்த கட்டுரைகள்

மேலே