வானம் ஞானம்

வானில்
வந்தன மேகங்கள்,
வந்தவை கறுத்தன
வானை மறைத்தன,
மோதிக்கொண்டன
மின்னல் வந்தது
இடியும் இடித்தது-
போர்களமானது வானம்..

கொட்டித் தீர்த்துவிட்டது
மழை,
மேகத்தின்
சரக்கு தீர்ந்துவிட்டது
வானம் தெளிவாகிவிட்டது,
ஆம்
வானத்திற்கு வந்தது ஞானம்..

ஓ,
இருப்பதையெல்லாம்
இழந்தால்தான்
ஞானம் பிறக்குமோ...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (18-May-19, 6:39 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : vaanam nanam
பார்வை : 37
மேலே