நிலையும் மாறுமா கவலையும் தீருமா

கோடை வெயில் ஆடையை நனைத்தது
ஓடையும் இல்லை தாகத்தைத் தீர்க்க
நிழலில் நின்றிட மரங்களும் இல்லை
ஒதுங்கிச் சென்றிட நடைபாதை இல்லை
சாலையில் ஊறுது வாகனங்களின் படை
இடையில் நிற்கவும் இடைவெளி இல்லை
நீர்ப்பந்தல் நினைவுகள் வந்து சென்றன
அம்மா குடிநீரும் விற்பனையில் இல்லை
நீர்நிலைகள் மாறியது அடுக்கு மாடிகளாய்
குடம்நீர் பெற்றிட குடும்பமே வரிசையில்
அடம்பிடிக்குது மழையும் வாராமல் இங்கு
அரசின் கவனமோ அரசைக் காப்பாற்ற
நகரங்கள் நரகமான அவல நிலையின்று
நாடும் காடானது வாழ்வும் வறண்டது
நிலையும் மாறுமா கவலையும் தீருமா ?


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (18-May-19, 9:09 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 419

மேலே