இதயத்தின் நிசப்தம்

வாழ்வின் கணங்கள் அனைத்தும் வலிகளாய் நிறைந்திருக்கையில்.. இன்று உன் வார்த்தையும் சிதைத்துவிடுகையில் மரத்துப்போகிறது மனஅறை குமுறல்களும்..!
அன்றாட என் பொழுதுகளில் உன் ஒற்றைநொடிக் காத்திருப்புகளும் என் மனதை புரிகையில்.., நீ மட்டும் வார்த்தைகளை என் கண்ணீருடன் சலவை செய்கிறாய்..
என் அன்றாடப் பொழுதுகள் உன் நினைவுகளுடன் கடக்கையில்.., எனக்காய் அளித்த உன் சில நொடிகளும் சினமாகத்தான் பிறக்கும் என்றால் அதற்கு உன் மௌனமொழியே அளித்துவிடு.. நினைவுகளுடனே வாழ்ந்திடுவேன்.., அழகான தருணங்கள் வலித்தாலும் அது அழகே..! போதும் என் வாழ்க்கை...!

எழுதியவர் : SARANYA D (18-May-19, 9:12 am)
சேர்த்தது : சரண்யா கவிமலர்
பார்வை : 244
மேலே