எல்லாம் தெரிந்தவன்

அவளுக்கு ஒன்றும்
தெரியாதென உரைத்து

பிள்ளை யொடு அமர்ந்தான்
கணவன்

மருத்துவர் முன் .

' எவ்வளவு வயது '
' ஐந்து '

' மலம் கழிந்ததா '
' கழிந்தது '

'சிறுநீர் கழிப்பில்
வேதனையா '

'ஆமாம் ஆமாம் '

பின்னிருந்து வந்த
தாயின்பதில் சரியானபடி -

முன்னால் தந்தை முழித்தபடி !

எழுதியவர் : Dr A S KANDHAN (18-May-19, 9:21 am)
சேர்த்தது : Dr A S KANDHAN
பார்வை : 2755

மேலே