அரசியல் வாதியின் மைக்

அரசியல் வாதியின் மைக்

முகத்தில் எச்சில்
தெறிக்கும்
பேசிய பேச்சுக்கள்
மனதில் ஒன்றை
மறைத்து வேறொன்றை
பேசிய வாய்
கேட்டு சலித்த
எத்தனை பொய்கள்
பிறர் வாழ்க்கையை
விளம்பரப்படுத்தி சுகம்
கண்ட மனிதர்கள்
இத்தனையும் மீறி
என் முகத்தில்
மோதிய வாயின் நாற்றம்
குடியோ எதுவோ ?
அத்தனையும் அனுபவித்து
அலுத்து சலித்து
ஓய்ந்து கிடக்கின்றேன்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (18-May-19, 12:50 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 46

மேலே