உறைய வைக்கும் பனிக்குகையில் அமர்ந்து பிரதமர் மோடி தியானம்

டேராடூன்:

கேதார்நாத் சென்றுள்ள பிரதமர் மோடி பனிக்குகையில் அமர்ந்து தியானம் செய்தார். நாடு முழுவதும் நாளையுடன் நிறைவு பெறுகிறது. கடந்த மாதம்
கேதார்நாத்தில் ஆய்வு

இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி இன்று அதிகாலை உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் சிவன் கோவிலுக்கு புறப்பட்டார். ஹெலிகாப்டர் மூலம் கேதார்நாத் சென்ற பிரதமர் மோடி, அங்கு மேற்கொள்ளப்படும் கட்டமைப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

பனிக்குகையில் தியானம்

பின்னர் பாரம்பரிய உடையில் காவி துண்டை இடுப்பில் கட்டியப்படி கையில் தடி, தலையில் தொப்பி என சிவன் கோவிலில் பிரதமர் மோடி வழிபட்டார். பின்னர் உறைய வைக்கும் குளிரில் கேதார்நாத் கோவிலில் உள்ள பனிக்குகையில் பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டார். காவி துணியை போர்த்தியபடி மோடி தியானம் செய்தார்.

நாளை பத்ரிநாத்

பின்னர் மலைப்பகுதியை சுற்றிப்பார்த்த பிரதமர் மோடி அங்கிருந்த சக மக்களை பார்த்து கைகளை அசைத்ததோடு கைக்கூப்பி வணக்கம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நாளை பத்ரிநாத் கோவிலுக்கு செல்கிறார் பிரதமர் மோடி.

ஓய்வெடுக்கும் வகையில்..
நடப்பு நாடாளுமன்றத் தேர்தலில் அதிக பிரச்சாரக் கூட்டங்களை நடத்தியவர் என்ற பெருமைக்குரியவர் பிரதமர் மோடி. லோக்சபா தேர்தலுக்காக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக சூறாவளி பிரச்சாரம் செய்த மோடி தற்போறு ஓய்வெடுக்கும் வகையில் கோவில்களுக்கு பயணிக்கிறார்.

எழுதியவர் : Bahanya (18-May-19, 5:18 pm)
பார்வை : 13

மேலே