என்னவள்

அழகிய அடுக்கு நந்தியாவட்டை மொட்டு
இதழ்கள் விரிந்து அலர்ந்தது கண்டேன்
மகிழ்ந்து நின்றபோது அவள் வந்தாள்
நான் கண்ட பூ ange அவள் முகத்தில்
இரு கண்களாய் ஆனதுபோல் அவள் விழிகள்
மலரும் மலராய் விரிய அவள் இமைகள்
மூடி திறந்து மூட மலரின்மேல் l வந்தமர்ந்த
வண்ணத்து பூச்சியை அல்லவே கண்டேன் நான்!
இது என்ன மாயம் நான் கண்ட பூ செடியில்…..
அதன் மேல் வண்ணத்துப் பூச்சி சிறகு விரித்து
மூட கண்டேன் ……. இல்லை அவள் என் மலர்விழியால்
இப்போது என்னருகில் ….. நான் சொன்னேன் அவளிடம்.
'என்னருகே நீ இருந்தால் காணும் அத்தனையும்
நீ யாகின்றாய்ப் பெண்ணே …. ஆம் அப்படிதான்
அந்த மலரில் உன் விழிகள் கண்டபின் , அதில்
அமர்ந்த வண்ணத்துப் பூச்சியில் உந்தன்
மூடிதிறந்த இமைகள் இரண்டை' என்றேன்
அவள் நாண என் தோள்களில் வந்து சாய.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (18-May-19, 8:24 pm)
Tanglish : ennaval
பார்வை : 286

மேலே