ஏக்கம்

கண்டேன் மலர்ந்த
உன் முகத்தை

பேரானந்தம் தான்
புரிந்துக் கொண்டேன்

சோகம் தீர்ந்தது
உனக்கு உன்

காதலன் வரவால்

என் காதலன்

வருவானோ என்
முகமலரச் செய்வானோ

என் முகந்தன்னில்
அந்த ஏக்கம்

தெரிகிறதா உன்
அனுபவம்

கூறேன் அல்லியே


எழுதியவர் : நா.சேகர் (18-May-19, 8:35 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : aekkam
பார்வை : 318

மேலே