இரவும் பகலும்

குடதிசையில் மறைந்தான் கதிரோன்
அந்தி சாய சிவந்தது வானம் புள்ளும்
ஒன்றாய் சேர்ந்து கூடு நோக்கி திரும்ப
இருளின் போர்வை மெல்ல விரிய
தெருவெல்லாம் 'சோடியம் லாம்ப்'இன்
வெளிறின மஞ்சள் ஒளி ……….
இரவும் வந்தது இருள் எங்கும் பரப்பி
கொஞ்சம் நேரம் போக கார்த்திகை
தீபம் போல் வானில் நட்சத்திர கூட்டங்கள்
நாயகனாய் கீழ் வானில் தோன்றினான்
சந்திரனும் இருளை போக்கி நீலவானைப்
பாற்கடல் ஆக்கினான் மண்ணோர் மகிழ
அங்கு கானகத்தில் மூங்கில்கள் தென்றல்
தாலாட்ட தானே குழல் ஊதி இசையும் சேர்க்க
விண்ணை நோக்க 'சுவர்க்கம்'போல் காட்சி
தந்ததே இருளின் இரவை மாற்றி

இரவும் போனது வெள்ளி முளைத்தது கீழ்வானில்
ஆயின் கருமேகப் போர்வையில் பகலும்
இரவானது…….சேவலும் கூவ மறந்தது
குயிலும் பாடாது போனது காலை கீதம்
நேரம் செல்ல....கோபத்தில் தீப்பிழம்பாய்
மெகாபோர்வையைக் கிளைத்து வெளி வந்தான்
பகலவன் … தடாகத் தாமரையும் சூரிய காந்தியும்
அதைக் கண்டு அகமகிழ்ந்து இதழ்கள் விரித்து
ஆர்ப்பரிக்க , சேவலும் கூவியது, குயிலும்
காலை ராகம் பாடி மன்னாரை எழுப்பியதே
சிறிதே காலம் தாழ்ந்த உதயம் என்றாலும்
மக்களும் மண்ணில் மகிழ்ந்தனரே.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (19-May-19, 9:52 am)
Tanglish : iravum pakalum
பார்வை : 101

மேலே