ஆண்டவனின் கண்ணீர்

பொன் விளையும் பூமியில்
செந்நிறக் களிம்பு
உயிர்களின் ஓலம் உலகையே உலுக்கியதே
ஓநாய்களின் குதூகலம் றெக்கை கட்டி பறக்கிறதா /
நெஞ்சங்களின் வஞ்சமா
புளித்துப் போன லஞ்சத்தின் வாஞ்சையா
ஐயோ ஏனிந்த கொடூரம்
கொதிக்கும் நெஞ்சத்தின் ஆறுதல் ஆண்டவன் சன்னிதானம்
அவன் காலடியில் அடைக்கலம் தேடி சென்ற
அப்பாவி உயிர்கள் அங்கங்கே சின்னாபின்னமாய்
சிதறிக் கிடக்க கண்டதென்ன மகிழ்ச்சி
சிந்திக்க வேண்டியவன் செயலிழந்து விடுகிறான்
செயலாற்ற முடியாத மனித நேயம் கொலைசெய்யப்படுகிறது
மனிதம் கொண்டவன் மனிதன் பின் எப்படி
கையாலாகாத செயல் களத்தில் அரங்கேறுகிறது /
சற்று சிந்திக்க நேரம் ஒதுக்கு மானிடனே
மனம் போன போக்கில் போகாதே
ஒவ்வொரு மனிதனும் வாழ ஆசைப்படும் போது
உன் கணக்கில் பூவையும் பிஞ்சையும் காயையும் கனிகளையும்
உலுக்கி கொட்டுகிறாய்
அப்போ படைத்தவன் கணக்கில் ஏது /
சிந்தித்து பார் உனது அழிவு உன்னிடம் அதை மாற்றமுடியாது
பற்றி எரியும் இதயம் ஒவ்வொன்றும்
தீப்பிளம்பாய் உன் முன்னே தெரிகிறதா/
எவன் எதை சிந்திக்கிறானோ அவன் அதே ஆவான்
நீ தோண்டும் குழியில் நீயே
அப்பாவிப் பிள்ளைப்பூச்சிகளின் அவலம்
ஆண்டவனின் கண்ணீர் நெருப்பாய் .

எழுதியவர் : பாத்திமாமலர் (19-May-19, 11:14 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : aandavanin kanneer
பார்வை : 44

மேலே