நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து லபோன்த்

நண்பா லபோந்த்
தலைக்கணம்
இல்லாத உனக்கு

அன்பா
இலக்கணம் இல்லாது
எழுதுகிறேன்
இந்த வெண்பா

நீ
விற்பனை செய்வது
ஆயில்
உனக்குக் கொடுக்கட்டும்
இறைவன்
நீண்ட ஆயுள்

கற்க கசடற
இது குறள்
நீ அதன் பொருள்

நீ
நெய்வேலியில்
பிறந்ததாலோ என்னவோ
உன் மனமும்
நெய்யாய் மணக்கிறது

உனக்கு
பிடித்த பூ நட்பூ
உன்னிடம்
பழகியவர்கள்
உன்னைவிட்டு செய்வதில்லை
வெளி நடப்பு
அதுவே உன் சிறப்பு
இன்றோ உன் பிறப்பு
சாயங்காலம் விருந்தாக
கோப்பைகளின் திறப்பு

உன்னால்
கல்லூரியில்
கள் ஊறியது

பார்கவ்
பார் கவி
ஆனான்

நீ புத்தகத்தைக்
கையில் வைத்திருந்தாய்
புத்தான அகத்தை
உன் மெய்யில் வைத்திருந்தாய்

நீ பொறியாளன்
அல்ல
நல்ல பண்புடைய
நெறியாளன்

நண்பனே
அன்புசால்
பண்பனே
நீ
நூறாண்டும்
பாராண்டும்
சீரோடும்
தேரோடும்
நல்ல
பேரோடும்
வாழ அன்புடன்
வாழ்த்துகிறேன்

எழுதியவர் : புதுவைக் குமார் (19-May-19, 11:43 am)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 53

மேலே