அவள் திருத்தி அமைக்கப்பட்டது

சோலைக் குயில் இசையில்
உந்தன் குரலோசைக் கேட்டேன்
அதில் வந்த கொஞ்சும் தமிழில்
தமிழே பண்ணாய் மாறி ஒலிக்க கேட்டேன்
மலரும் மலர்களில் உன் விழிகள் கண்டேன்
அசையும் உன் விரி கூந்தலில் கார்மேகம் கண்டேன்
துள்ளும் உந்தன் நடை அழகில்
கோலா மயில் நடனம் கண்டேன்
அசைந்துவரும் உன் நடை அழகில்
அன்னமே நடைபயிலக் கண்டேன்
என்னருகில் வந்து நீ கொஞ்சுகையில்
மாடப் புறாவின் கொஞ்சும் காதல் மொழி கேட்டேனடி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (19-May-19, 2:30 pm)
பார்வை : 176

மேலே