தி மு க வுக்கு இரட்டை தோல்வி

தி மு க வுக்கு இரட்டை தோல்வி
*******************************************
தி மு க நாடாளுமன்றத்தில் காங்கிரசை ஆதரித்து ஒரு தோல்வியும்
இடைத்தேர்தலில் 22 தொகுதியை வெல்லமுடியாமல் போனதாலும்
இரட்டிடை தோல்வியை தழுவுகிறது ,,,,,,,!

இது திமுகவின் அரசியல் சாணக்கியமின்மையையே காட்டுகிறது .
ஒரு சாதாரண குடிமகனுக்கே தெரியும் மீண்டும் பிஜேபி தான் வருமென்று
தமிழ் நாட்டில் பிஜேபி எதிர்பாலை இருப்பது உண்மையே அதை மட்டும் வைத்து மத்தியஅரசு மாறும் என திமுக தலைவர் கணக்கு போட்ட்து
மிகத்தவறு , சாதாரண குடிமகன் அந்த கணக்கை போடலாம் .திமுக தலைவர் போடலாமா ....? எத்தனை உளவுப்படை தகவல் தெரிந்திருக்கும்
அதையெல்லாம் புறக்கணித்து ,காங்கிரஸ் மத்தியில் வரும் என நினைத்தது எந்தப்பெரிய தவறு , மோடியின் இமாலய வெற்றிக்கு காரணமே அவருக்கு எதிர் பிரதம வேட்ப்பாளர் இல்லாமையே ,

இப்போ திமுக நிலை பரிதாபம் , மத்தியிலும் இல்லை மாநிலத்திலும் இல்லை , சரியான தலைமை என்றால் கடும் பாடு பட்டு 22 இடைத்தேர்தலை முழுமையாக வென்றிருக்க வேண்டும் . இப்போ எதிர்கால தேர்தல் எல்லாம் கேள்விக்குறியாகிறது . வரவிருக்கும் உள்ளுயிராட்சசி மன்ற தேர்தல் அதிமுக கூடடணி இலகுவாக கைப்பற்ற போகிறது .

அந்த வெற்றி 2021 ஆண்டு சடடமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக கூட்டணி வெல்லப்போகிறது .

அதிமுக சானகிக்கியம் மிக சிறப்பு பாராளுமன்ற வாய்ப்பை குறைத்து
சட்ட மன்ற தேர்தலில் முழுக்கவனத்தையும் செலுத்தியதே மிக பெரிய வெற்றி .

இது 2021 ஆண்டு சடடசபை மற்றும் அதன் பின் நாடாளுமன்ற தேர்தல்
என்பவற்றின் வெற்றிக்கு இன்றே அடிக்கல் நாட்டி விட்ட்து போல் தெரிகிறது .

2021 ஆண்டு சடடசபை தேர்தலில் தமிழ் நாடடில் பிஜேபி முதல் முறையாக சட்ட மன்ற உறுப்பினர்களை பெறப்போவதும் நடைபெற இருக்கிறது

திமுக இந்த நாடாளுமன்ற சிறிய வெற்றியை பெரிய வெற்றியாக மன ஆறுதலுக்கு தொண்டர் மத்தியில் காட்டலாம் ...? என்ன பிரயோசனம் ...?
திமுக தனது காட்சிக்குள் பல கடடமைப்பு மாற்றத்தை செய்ய வேண்டியுள்ளது . பாமகவை சேரவிடாமல் தடுத்த திமுக நபர் யார் ...?
@
அரசியல் அவதானி

எழுதியவர் : அரசியல் அவதானி (20-May-19, 6:13 am)
பார்வை : 56

மேலே