கவர்ந்து சென்ற

மண்ணால் சுவையோ
மரத்தால் சுவையோ
காற்றால் சுவையோ
கதிரால் சுவையோ
எவற்றால் சுவையை
எக்காய் கனிகளும் பெற்றன

வேரால் கிடைக்கும்
தாதுக்கள் யாவும்
தரமான சுவையாய்
மறுவது எங்ஙனம்
தடந்தோறும் சுவையது
தரம் மாறும் காரணம் தழைப்பான மண்ணோ?

முகிலாய் தவழ்ந்து
முடிவில் முதிர்ந்து
உதிரும் மழையால் கிளர்ந்த இலைகள்
கவர்ந்து சென்ற கனிம வளங்கள்
காயாய் ஆகி கனியாய் கனிந்து
தேன் சுவைக் கொடுக்க காரணமாச்சோ?
--- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (20-May-19, 2:18 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 35
மேலே