காற்று வெளியிடை கண்ணம்மாவின் நீல நிறத் துப்பட்டா

ஆறு குளங்களில் தண்ணீர் இல்லை
வறட்சி
கிணற்றில் தண்ணீர் கீ.........................ழே !
வாளியைப் போட்டால் கயிறு நீளம் இல்லை !
நீல நிறத் துப்பட்டாவை சேர்த்துக் கட்டி
பாறைக்கிடையில் கிடந்த தண்ணீரை
இறைத்து இறைத்து ஊற்றினாள் .....
அரைக்குடம் கிடைத்தது
இடையில் ஏந்தி அவள் நடக்கும் போது
குறைகுடம் தள தள வென ததும்பியது
நீ சிரி சிரி
எங்களுக்கில்லை காவிரி !
தேர்தல் முடிவுகள் வந்து விடும்
மார்தட்டி வெற்றி விழா எடுப்பார்கள் !

காற்று வெளியிடை கண்ணம்மாவின் கண்ணீர் துடைக்க
இங்கு ஏது துப்பட்டா jQuery17106986529899195686_1558412195903?!!!

எழுதியவர் : கவின் சாரலன் (21-May-19, 9:24 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 90

மேலே