காதல்

கறுப்பில்ல வெளுப்புமில்ல
காதலுக்கு நிறம் ஏதுமில்லை
காதலுக்கு சுவையெதும் உண்டா
எனில் தித்திப்பும் உண்டு சிலபோது
கசப்பமுண்டு , மணம் உண்டா காதலுக்கு
எனில் அது பரப்பும் எப்போதும்
மல்லிகையின் சுகந்தம்
தொட முடியுமா காதலை எனில்
பார்க்கும் வானைத் தொடமுடியுமா
தொட்டால் காதலையும் தொட முடியும்
தென்றல் நம்மைத் தொடும்
சுகம் தந்து அதுபோல் காதல் நம்மைத்
தொட்டு சுகம் தரும் நாம் காதலைத்
தொடமுடிவதில்லை ஒரு போதும்
'Love is ethereal, infinite and is immeasurable
and so it lives for ever'

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (21-May-19, 4:48 pm)
Tanglish : kaadhal
பார்வை : 124

மேலே