காதல் காற்று

காதல் காற்று வீசுதே!
கவலை மாறி போகுதே !
சாதல் வரை நீ என்று
சலனம் இன்றி பேசுதே !

கண்ணிமைகள் அசைவதெல்லாம்
நம் காதலுக்கு தாலமன்றோ!
பெண்ணரசி உன் மனமோ-என்னை
தனிமை தந்த சிறையன்றோ!

கனவுகள் வரும் வழியெல்லாம்
காதல் தந்த பாதையன்றோ!
மனபுனைவுகள் நாம் கொண்டாலும்
மௌன காதல் முதல் ஆகும்!

காதலே காதல் என்று
கனிந்து நான் மொழிந்திடவே!
ஆவலே தொடர்ந்து வந்து
பூவில் நாம் நடைபயில்வோம்.

எழுதியவர் : வெங்கடேசன் (22-May-19, 8:57 am)
சேர்த்தது : வெங்கடேசன்
Tanglish : kaadhal kaatru
பார்வை : 268

மேலே