கல்வி

கற்க கசடற
இதனை எழுதினார்
வள்ளுவர் குறளாக
நாம் நல்லவர்களாய்
வாழவேண்டும்
இதன் பொருளாக

தான் எழுதிய
குறள்களில்
இக்குறளை மட்டும்
உரக்கச் சொன்னது
வள்ளுவரின் குரல்

தோல்வி எனும்
தோல் வியாதிக்கு
மருந்து கல்வி

இதுவரை
பூத்தப் பூக்களில்
மிக வாசமான பூ
வெற்றியின்
வசமான பூ
படிப்பு

புத்தகமே
மனிதனுக்குப்
புத்தான அகத்தைக்
கொடுக்கிறது

நம்மை
பட்டங்கள் மூலம்
வானில் உயர்த்துவது
வெண்நூல்கள் அல்ல
நன்னூல்கள்

அதி காரம்
இல்லாத வள்ளுவரின்
அதிகாரம் படித்தே
அதிகாரம் உள்ள
பதவியில் படித்தவர்கள்

சாதாரண மாணவனை
தரமானவன் ஆக்குவது
கல்வியே

குடிசையில்
இருப்பவனை
குடியரசுத் தலைவர்
ஆக்குவதும் கல்வியே

படிப்போம்
அதன்படி நடப்போம்

எழுதியவர் : புதுவைக் குமார் (22-May-19, 2:38 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
Tanglish : kalvi
பார்வை : 100

மேலே