மாமன் மகள்

பூவே பூவாய் பூப்பூத்தாய்
பூப்பெய்தி நீ மாமன் நான்
பார்க்கையிலேயே பூவே நீ
காயானாய் நேர்த்தியாய் கன்னியாய்
கனிபோல் நீ , பார்த்துநான் ரசிக்கையிலே
கனிபோல் முகம் கனிந்து அழகு பொங்க
சேலத்து மாங்கனிபோல் உன்
கன்னங்கள் சிவந்து பொலிய
வெள்ளை சங்கு மலராய் காதும்
அதில் தொங்கும் அழகு முத்து லோலாக்கு
எட்பூ மூக்கில் கெம்பு புல்லாக்கு
தலையில் கட்டு க்கூந்தல் கார்மேகமாய்
பின் தோளில் விரிந்து விளையாட
வில் போல் புருவங்கள் கீழ்
கயல்போல் இரு விழிகள்
இமைகள் மூடி திறந்து எனைப் பார்க்க
பார்த்து கண் பேச இது என்ன
மௌன மொழி என்று உந்தன் கொவ்வை
இதழ்கள் திறந்து பேசும் தமிழில் பேசி பழக
மாமன் மெய்மறந்தேனடி கண்ணே
என்னையே உன்னிடம் தந்தேன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (22-May-19, 3:14 pm)
Tanglish : maaman magal
பார்வை : 159

மேலே