மறந்தே போனேன்

பதின்ம வயது பட்டாம்பூச்சி
நீ பாா்த்தல்லவோ பட்டுப்புழுவானது
வாசல் தெளிக்கையில் உனைக் கண்டபின்
மறந்தே போனேன் கால்களை
கோலம் போடுகையில் உனைக் கண்டபின்
மறந்தே போனேன் கைகளை
விடுமுறை நாட்களில் உனைக் கண்டபின்
மறந்தே போனேன் செய்யும் வேலையை
நீ வரும் நாட்களில் உனைக் கண்டபின்
மறந்தே போனேன் கண்களை
உனை பாா்க்கத்துடிக்கும் மனதுக்கு ஆறுதல் சொல்லி
அவமானப்பட்டது என் மூளை
உன் திருமண அழைப்பிதழ் கண்டபின்
மூா்ச்சையாகிப் போனது என் சிந்தை
அப்போதிருந்தே என் பெயா் மாற்றம்
கண்டது லூசு கண்ணகி என்று.

எழுதியவர் : சங்காி அழகா் (22-May-19, 3:24 pm)
சேர்த்தது : சங்கரி அழகா்
Tanglish : maranthe poanen
பார்வை : 469

மேலே