தேர்தல் தரகுக்கு சன்மானம் பெறும் நாள்

தரகு முடிந்து வாங்கிய மாடு
கரக்கும் பாலை கணக்குப் பார்க்க
சிறப்புமிக்க முதல் நாள் இன்று

உழக்கு அளவு பாலாகவும் இருக்க வாய்ப்பும்
உழக்கின் அளவில் மும்மடங்காகவும்
உழக்கு உடைந்து ஒழுகும் நிலையாவும் இருக்கலாம்

முன்கணிப்பு கலைஞர்களின் முயற்சியால்
மகிழ்ந்து கறந்த பாலின் தரம் உயர்வாய் சிலருக்கு
பாலில் கலப்படும் செய்ததாய் கூறி சிலர்

தரகர்களின் தனித்திறமையால் தரம் மறைந்ததாய்
நடுநிலையாளரின் நாக்கில் நர்த்தனமாடும் சொற்கள்
விற்கப்பட்ட மாடும் விற்றவனும் நிர்க்கதியாய்

நேரம் இன்று நிகழ்வதைச் சொல்லும்
நேர்வதைப் பார்க்க நிமிர்ந்து அமர்ந்து
நிறைவான மனதோடு நிகழ்வை ஏற்போம்.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (23-May-19, 8:29 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 32

மேலே