என் அன்பு காதலியே

என் அன்பு காதலியே...

கண்மனியே என் காதல் இளவரசியே
என் நெஞ்சில் என்றும் குடியிருக்கும்
என் உயிரே
எழில் வடிவமே
வஞ்சி கொடியே
மெல்லிய தென்றல் காற்றில் அசைதாடும் வண்ண மலரே
உயிர் ஓவியமே
உன் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கும்
உன் அன்பு காதலன்.

நீ வந்தவுடன்
உன் கரம் பற்றி
மெளனமாக கடற்கரை மணல் பரப்பில் சற்று தூரம் நடக்க ஆசை.

துள்ளி விளையாடும் அலைகளில் நாம் இருவரும் ஆசை தீர கால் நினைக்க ஆசை.

உன் முகம் பார்த்து
பல முறை உன் பெயர் உச்சரிக்க ஆசை.

உன்னை வர்ணித்து பல பக்கம் புது கவிதை எழுத ஆசை.

உன் அனுமதியுடன்
உன் மடியில் சில நிமிடம் என் தலை சாய்க்க ஆசை.

இது கொஞ்சம் பேராசை
நீ அனுமதித்தால்
அன்பு மொழி தமிழ் பேசும் உன் தேன் சிந்தும் இதழில்
ஒரே ஒரு முத்தம்
சத்தம் இல்லாமல் தர ஆசை.

உன் அன்பு காதலன்.

- பாலு.

எழுதியவர் : பாலு (23-May-19, 7:55 pm)
சேர்த்தது : balu
Tanglish : en anbu kathaliye
பார்வை : 847

மேலே