ஆசிரியர்!
உலகம் அறியா பல ஆட்டு குட்டிகள்,
காலையில் அழுது கொண்டே பள்ளிகூடம்,
செல்வதை கண்டு மனம் வருந்தலாம்!
ஆங்கே சென்று பாருங்கள் ஆசிரியரின் அன்பை!
அறுபது வயதிலும் ஆசை வரும் அங்கு சென்று உக்கார!
உலகில் விடை அறியா கேள்விகள் பலவிருந்தும்,
இவர் சொல்லும் விளக்கத்தில் எவருக்கும் சந்தேகமில்லை!
எவரும் வற்புறுத்த தேவை இல்லை இவர்பால் மரியாதை ஊட்ட;
இவர்கால் வகுப்பில் வந்தவுடன் மாணாக்கள் கால்கள் தானாய் நிற்கும்!
வாழ்வில் பல திருப்பங்கள்
அதில் ஒன்றிலேனும் எல்லொர் வாழ்க்கையிலும்,
ஆசிரியர்!!
"நன்றி மறப்பது நன்றன்று" என்று
கற்பித்ததே ஆசிரியர்
அந்த ஆசிரியருக்கு நன்றி செலுத்த மறக்கலாகுமா!
மறந்தால் வாழ்க்கை இனிக்குமா!