காதல்

நான் அவன் காதலி
அவன் என் காதலன்
காதலர்கள் நாங்கள்-எங்கள்
காதலுக்கு சாட்சி அதோ தெரியுதே
அந்த பொங்கும் அழகு வெண்ணிலவு
அந்த வளர்மதியாய் வளர்ந்த எங்கள்
காதல் பூரணநிலவுபோல் காட்சி தந்தது
அந்த நிலவே அதற்கு சாட்சி ஏனென்றால்
அந்த நிலவால்தான் அதைக் காணமுடிந்தது
பூரண நிலவு பொலிவிழந்தது பிறைநிலவாய்
இருந்து காணாமல் போனது அமாவாசையில்
அவன் மீது சந்தேகம் என் நெஞ்சில் வந்தது
எங்கள் இடையில் ஊடலாய் தீயானது
காதல் அணைந்து கருகியது அந்த
அமாவாசை நிலவாய்...…
இதோ,இன்று தனிமையில் நான் முற்றத்தில்
நீல வானில் நட்சத்திரங்கள் மின்மினுக்க
ஒரு சிறு கீறலாய் கீழ்வானில் நிலவு …..
உயிர்பெற்று எழுந்தது நிலவு……
காதலர் எங்கள் காதல் சந்தேகத் தீயில் கருகியது
உயிர்பெற்று எழவில்லை
இதோ தனிமையில் நான் …..
நிலவே நீயே சாட்சி …..

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (24-May-19, 3:07 pm)
Tanglish : kaadhal
பார்வை : 233

மேலே