நம் காதலை

நம் காதலை

கவிதையாய் சொல்ல
நினைத்தால்

கதையாய் செல்லுதடி

கதையாய் சொல்ல
நினைத்தால்

கவிதை குடியேறுதடி

கவிதையிலும் பொய்
கதையிலும் பொய்

நம் காதலை

உலகுக்கு சொல்ல
நினைத்தால்

உண்மையை சொல்லட

எனக்கு நீ உனக்கு
நான் என்ற

உண்மையில் நில்லடா

கவிதையும் கதையும்
உலகத்திற்கு தானே

எழுதியவர் : நா.சேகர் (24-May-19, 5:30 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : nam kaadhalai
பார்வை : 220

மேலே