மகனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்

அன்பிற் குரியவன் பண்பிற் சிறந்தவன்
அழகில் மன்மதன் !
கன்னல் மொழியினன் பழக இனியவன்
கருணை மனத்தினன் !
பொன்னின் நிறத்தவன் பூப்போல் உளத்தவன்
பொலிவில் சுந்தரன் !
என்றன் மகனிவன் என்றும் நலத்துடன்
இனிதே வாழ்கவே !!

கண்ணின் மணியென மனைவி மக்களைக்
கருதும் தூயவன் !
எண்ணம் முழுவதும் பிறருக் குதவிடும்
இதயம் படைத்தவன் !
அண்ணன் தம்பியர் அக்கா தங்கையர்
அன்பில் நனைபவன் !
வண்ணக் கனவுகள் விரிய புவியினில்
வாழ்க வாழ்கவே !!

அன்புமகன் விஜய் -க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 🌹🌹🌹🌹🌹
நீளாயுள் , நிறைசெல்வம் , நிம்மதியோடு நீடு வாழ்க❤️❤️❤️💐💐💐💐💐💐

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (24-May-19, 9:28 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 52

மேலே