யாரோ அவன்

பொருள் பொழியும்

அவன் ஹைக்கூவில்

வார்த்தை பஞ்சம்.

அருள் பொழியும்

அவன் கண்களில்

வாழ்க்கை தஞ்சம்.

ஒரு முறை பேச

சில முறை அவன் யோசனை.

முதல் முறை பேசி

பல முறை அவன் வாசனை.

பெண்மையின்

இலக்கணம் புரிந்தவன்.

வாய்மொழியில்

இலக்கியம் மொழிபவன்.

அந்த கவிஞன்

கொஞ்சம் கஞ்சன்.

ஒரு சொல்லில்

இரு பொருள்

தருவான்.

இமையோடு

இமை பொருத்தி

புதுக் கனவுகள்

வரைவான்.

கண்ணில்

உயிராய் ஒளி தருவான்.

மண்ணில்

வளியாய் உயிர் தருவான்.

யாரோ அவன்?

எழுதியவர் : பர்வின்.ஹமீட் (24-May-19, 11:36 pm)
சேர்த்தது : பர்வின் ஹமீட்
Tanglish : yaro avan
பார்வை : 188

மேலே