அவள்

அவள் அழகி , பேரழகி அவள் முகமோ
அவள் அழகிற்கு இலக்கணம் adhuve
என்று என் கவிதை வரிகள் நீள
அவள் கண்கள் என்னிடம் பேசியது
'துள்ளும் கயல்தான் அவள் கண்கள்
என்று வரித்தாயே கவியே மறந்தாயோ
அதனால் அவள முகத்திற்கே அழகு நானே
என்றது, அதைக் கேட்ட அருகில் இருந்த
அவள் பவள வாய் சொன்னது, கவியே,
' கூம்பிய இவள் இதழ் மாதுளை மொட்டு
அது மலர சிவந்த மாதுளைப்பூ ' என்றல்லவோ
எழுதியுள்ளாய், அதனால் அவள் அழகி
என் இந்த விரி இதழால்தான் அல்லவா
இதைக் கேட்டுக்கொண்டிருந்த முகம்
சொன்னது, கவிஞரே என் முகத்தை நீ
அன்றலர்ந்த செந்தாமரை என்று எழுத
நான் சொல்வேன்,' இந்த முகம் அழகு
தாமரைப்போல் அதனால் வஞ்சி அவள்
அழகு, பேரழகு அழகிற்கே இலக்கணம் என்பேன்
என்றது...…… இப்படி அவள் அங்கம் ஒவ்வொன்றும்
நான்அழகு ,நானேதான் அழகு என்று
போட்டிபோட …...கவிஞன் அவளை மேலும்
எழுத திக்கு முக்காடிபோனானே.
,

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (25-May-19, 8:09 pm)
Tanglish : aval
பார்வை : 350

மேலே