நளினி--------------அரசியல்------------------April 13, 2010

Dear J,

What is your opinion about the ongoing drama about Nalini’s release?

Do you think she should be released?

I feel the whole purpose of jail & punishment is to reform a person and NOT a state-sponsored revenge. Rajiv’s murder is terrible but so are the Kovai blasts. If the terrorists responsible for Kovai blasts can be released after 10 years why not Nalini? Knowing well how carefully the LTTE plans a secret operation, Nalini definitely may not be a part of conspiracy, but might have got some clue at the end just before the incident. In her youthful enthusiasm at that time, she even might have been thrilled to be part of the gang. Benefit of doubt could have been given to her.

The tragedy is the whole episode is based on assumptions. Congressmen think that Sonia will be happy if they oppose the release. Karunanidhi is reluctant to order release since he is scared of Congress withdrawing their support ( same happened when Jain (?) commission gave the report and he lost the CM chair.

jas

அன்புள்ள ஜாஸ்,

இந்த விவகாரம் எனக்கும் மிகுந்த சங்கடத்தை அளிப்பதாகவே உள்ளது. மலையாளத்தில் சொல்வார்கள், ‘பசுவும் செத்தது மோரில் புளிப்பும் இல்லாமலாயிற்று’ என்று. எல்லாமே ஒரு வரலாறாக, கசப்பான நினைவுகளாக மாறி மறைந்துவிட்டிருக்கின்றன. இன்றும் நளினி போன்ற ஒரு சந்தர்ப்பசூழலின் இரையை சிறையில் இட்டிருப்பதென்பது அறமற்ற செயல் என்றே படுகிறது. அவரது குற்றத்துக்கான தண்டனையை அவர் அனுபவித்து விட்டிருக்கிறார். அவரது வாழ்க்கை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டது. அவரையும் பிற ராஜீவ் கொலைக்குற்றச்சாட்டுக் கைதிகளையும் விடுதலை செய்வதே இந்தியா தன் முகமாக முன்வைக்கும் ஜனநாயகத்துக்கும் தார்மீகத்துக்கும் உகந்ததாக இருக்கும்.

நீங்கள் சொல்வதுபோல ஓர் அரசு பழிவாங்கும் நோக்குடன் நடந்துகொள்வதென்பது எவ்வகையிலும் முறையானதல்ல. நளினி குற்றங்களுக்காக வருந்தவில்லை என்று நீதி மன்றம் சொல்லியிருக்கிறது. அது அபத்தமான வாதம் என்று நினைக்கிறேன். அரசியல்கைதிகள் பொதுவாக அப்படி வருந்துவதில்லை -வருந்தினாலும் சொல்வதில்லை. அவர்கள் எவற்றுக்காக வாழ்ந்தார்களோ அவற்றை நிராகரிப்பதற்குச் சமம் அல்லவா அது?

சென்றகாலங்களில் இங்கே பெரிய குற்றங்களைச் செய்த நக்ஸலைட்டுகள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இன்றும் தங்கள் வாழ்நாள் சாதனையாக அக்குற்றங்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அது அப்படித்தான் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும். வரலாற்றின் காலகட்டம் முடிந்தபின்பு அதை முன்னெடுத்துச் செல்லலாகாது.

நளினி விடுதலையின் சிக்கலே அதற்கான சிபாரிசைச் செய்வதற்கு, அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு, அரசியல் துணிச்சல் எவருக்கும் இல்லை என்பதுதான் என்று படுகிறது

ஜெ



Save
Share
=====================================================================================
15 comments
rsgiri
April 13, 2010 at 12:36 am (UTC 5.5)
ஜெ,
இங்கே எல்லாம் அரசியல். வெளியிடச் சொல்பவர்கள், வெளியிட யோசிப்பவர்கள், மறுப்பவர்கள், ஆதரிப்பதாய் நடிப்பவர்கள், எதிர்ப்பதாய் குரல் கொடுப்பவர்கள் என அனைவருக்கும் அவரவர் சார்ந்த இயக்கம் சார்ந்த அரசியல் பழகும் அவசியம் இருக்கிறது. இதில் பாவாத்மாக்கள் மறைந்த ராஜீவ் காந்தி அவர்களும், ஏதோ ஒருவகையில் இதனுள் அகப்பட்டுக் கொண்ட நளினியும்தான்.

ganesan
April 13, 2010 at 7:41 am (UTC 5.5)
அன்புள்ள ஜெயமோகன்,
நளினி அவர்கள் ஏற்கனவே கருணை காட்டப்பட்டு மரண தண்டனையிலிருந்து தப்பித்தவர். மீண்டும் மீண்டும் அவரை மன்னித்துக்கொண்டே இருக்க வேண்டுமா? அவர் உதவிய இயக்கத்தில் ஒரு முறையாவது யாருக்காவது மன்னிப்பு வழங்கப்பட்டது உண்டா ?
ஒரு நாட்டின் பிரதமராக இருந்தவரை, மீண்டும் வர வாய்ப்பு இருந்தவரை திட்டமிட்டு கொன்றவர்களை மன்னிக்கலாம் என்றல், எதோ ஒரு அவசரத்தில் சொந்த அண்ணனையோ, தம்பியையோ கொன்றவர்கள் பலர் சிறையில் இருக்கிறார்களே? அவர்களை மன்னிக்க வேண்டியது தானே? பின் எதற்காக காவல் துறை, இராணுவம்? பாகிஸ்தான் உட்பட எல்லா எதிரிகளையும் மன்னிக்கலாமே?
பிரதமரை கொன்றதைவிட ஒரு சில அப்பாவிகளை கொன்றது சாதாரண விசயமே. எனவே கசாப்பையும் மன்னித்துவிடலாமே?
– கணேசன்

ramji_yahoo
April 13, 2010 at 8:35 am (UTC 5.5)
ஏற்கனவே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் புலிகள், ஈழம் ஆதரவு எடுத்து , வாக்குக்களை இழந்த அனுபவம் இருக்கிறது அதிமுக, கம்முநிச்ட்கள், மதிமுக விற்கு.

எனவே தான் நளினி குறித்து வாய் திறக்க எதிர் கட்சிகள் அஞ்சுகின்றன. அதுவும் மேலவை உறுப்பினர், பென்சன், வாழ்க்கை முழுதும் இலவச பயணம் போன்ற வாய்ப்புக்கள் வரப் போகின்ற காலத்தில் வாயை கொடுத்து வாய்ப்பை இழக்க யாருக்குதான் ஆசை வரும்.

snramesh
April 13, 2010 at 8:44 am (UTC 5.5)
அவருக்கு அந்த குற்றத்தில் பங்குடைத்தாயினும் அதற்கு உரிய தண்டனையை அவர் அனுபவித்தாயிற்று. மனித உரிமை பற்றி பேசும் பலரும் இந்த பெண்மணி விஷயத்தில் வாய் மூடி மௌனிகளாய் இருப்பது வேதனைக்குரியது. விடுவிக்க மறுக்கச் சொல்லும் காரணங்கள் அபத்தக் களஞ்சியம். இவை ஒரு பொது மேடையில் விவாததற்கே வராதது ஏன்? சமூகம் தன் கடன் ஆட்டம், பாட்டம், கிசுகிசு அரசியல் என்றளவில் அடங்கியதாலா?

V.Ganesh
April 13, 2010 at 1:37 pm (UTC 5.5)
டியர் ஜெயமோகன்
இதற்கு நீங்கள் கருத்து கூறியிருக்க கூடாது. இது போன்ற விஷயங்களில் சரி / தவறு என்பதற்கு இடமில்லை. உங்கள் உலோகம் நாவெல் போன்ற முடிவு தான். அவ்வளவு நாட்களாக பழகும் போது கொல்லாத ஒருவரை ஆணை வரும் போது கொல்கிறான். அவன் செய்தது சரியா / தவறா? அது வாசகர் மன நிலையை பொருத்தது. ( நீங்கள் கருத்து கூறக் கூடாது என்று சொல்லவும் எனக்கு உரிமை இல்லை என்றும் தெரியும்). மனித உரிமை வேண்டுமானாலும் கூறலாம் / நாட்டின் பிரதமர் என்றும் கூறலாம். உங்களை போன்ற ஒரு தீவிர கருத்தாக்கம் உடையவர் சில விஷயங்களில் அணி சேராதிருப்பது நல்லது தானே.
அன்புடன்
கணேஷ்

SAMINATHAN B
April 13, 2010 at 3:47 pm (UTC 5.5)
அன்புள்ள ஜெயமோகன்,
மிக நிச்சயமாக நளினி சூழ்நிலை கைதி அல்ல ராஜீவ் கொலை வழக்கில் நீங்கள் உங்கள் இணையத்தில் பரிந்துரைத்த
ராஜீவ் கொலை வழக்கு புத்தகத்தில் இருந்தே இதனை தெரிந்து கொள்ளலாம். ஒரு வழக்கின் தலைமை அதிகாரி கூறியதை அவரின் கருத்து என்று கூறிவிட மாட்டிர்கள் என்பது நம்பிக்கை. நமது குற்ற இயல் சட்டங்கள் மற்றும் அரசியல் உரமின்மை தான் நளினி மரண தண்டனையில் இருந்தும் தப்பி ஆயுள் தண்டனை கைதியாக இருப்பதன் காரணம். நமது நாட்டின் ஜனநாயகதிற்கும் தார்மிக நெறிகளுக்கும் மிகவும் பின்னடைவு முன்பே ராஜீவ் கொலை வழக்கின் தண்டனைகளை அமல் படுத்த தவறியதுதான். ராஜீவ் மட்டும் அல்ல ஒரு அரசின் தலைவர் அவரது மக்களுடன் சேர்ந்து கும்பல்ஆக கொள்பவர்கள் அதற்கு துணை நிற்பவர்கள் அரசியல் காரணங்களினால் அதனை செய்தால் அதற்கான விளைவுகளையும் ஏற்றுகொள்வது தான் சரியான வழி. வரலாற்றின் காலகட்டத்தில் எல்லாவற்றையும் மறந்து முன் எடுத்து செல்லாமல் இருந்தால் நிறைய விசயங்களை நாம் கைவிட வேண்டி வரும். இத்தகைய போலி தமிழ் மனித நேய கட்டுரை நான் உங்களிடம் எதிர் பார்க்கவில்லை.
நன்றி!! அன்புடன்
SAMINATHAN.B

Ramachandra Sarma
April 13, 2010 at 10:20 pm (UTC 5.5)
ஜெ, உங்களிடம் இருந்து இப்படி ஒரு கருத்தை எதிர்பார்க்கவில்லை. இது ராஜீவ் கொலை மட்டுமே என்பது போல எப்படி எடுத்துக்கொள்ளமுடியும். ராஜீவுடன் இறந்த போலீஸ் மற்றும் பொதுமக்களின் மனைவிகளும், வாரிசுகளும் எதுவும் பேசக்கூடாது என்று எடுத்துக்கொள்ளவேண்டுமா? அவர்களது கருத்தும் கேட்கப்படவேண்டுமா இல்லையா? அதுவுமின்றி அதற்கு உரிய தண்டனையை அவர் அனுபவித்தாயிற்று என்று பலர் கூறுவது எப்படி என்று தெரியவில்லை. சரி இவ்வளவு போதும் என்று சொல்வதற்கு நாம் யார்? அவரை விடுதலை செய்வது என்பது சட்டத்திற்கு விரோதமான செயலாகத்தான் இருக்கும். ஒரு நாட்டின் தலையெழுத்தையே மாற்றிவிடக்கூடிய ஒரு கொலைகுற்றத்தை செய்ய தெரிந்தே துணைபோனவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் மரணதண்டனை குறைக்கப்பட்டதே மிகப் பெரிய நன்மை. அனுபவித்தாயிற்று விடுதலை என்பதெல்லாம் ரெம்ப ஓவர். நக்ஸல்களோடு இவர்களை ஒப்பிடுவதை ஒப்புக்கொள்ள முடியவில்லை.

N.V.Balaji
April 13, 2010 at 11:49 pm (UTC 5.5)
இது முறையான வாதமாகப் படவில்லை. நளினி சந்தர்ப்பசூழலின் காரணமாக ராஜீவ் கொலையில் ஈடுபடவில்லை. முழுமையாக அறிந்தே ஈடுபட்டிருக்கிறார். இதில் அரசாங்கத்தின் ஜனநாயகம் எங்கிருந்து வந்தது. இது ஒரு போலி முற்போக்கு வாத கட்டுரையாகவே தெரிகிறது.

அன்புடன்
பாலாஜி என் வி

gomathi sankar
April 14, 2010 at 8:35 am (UTC 5.5)
இந்த சிக்கல் கால காலமாக எப்போதுமே இருந்துவந்திருக்கிறது தனிமனிதனின் அறத்திற்கும் சமூகத்தின் அறத்திற்கும் உள்ள முரண் மறுபடி ஒரு தடவை விவாதத்திற்கு வந்திருக்கிறது பௌத்தம் தனக்கு தீங்கு இழைத்தவனை முழுமையாகவே மன்னித்து விட சொல்கிறது இஸ்லாமில் பாதிக்கப் பட்டவர் மன்னித்தால் தண்டனை குறைக்கப் படலாம் இது அந்த மதங்களின் அறம் இந்திய பீனல் கோட்டின் அறம் என்ன?அறம் சட்டமாக இருக்க வேண்டியது இல்லை இந்த விஷயத்தில் எல்லா தரப்பினரின் நிலைகளும் மாறிக் கொண்டே இருந்திருக்கின்றன எனக்கு தெரிந்து சோ சுப்ரமணிய சாமி இரண்டு பேர் மட்டும்தான் ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க கூடாது என்று ஒரே கருத்தை சொல்லி வந்திருக்கின்றனர் ராஜீவ் கொலை நடந்து முடிந்த உடனே நளினியை 15 வருடங்கள் கழித்து விடுவிக்கலாமா என்று கணிப்பு நடத்தி இருந்தால் வேறு விதமான பதில்களே வந்திருக்கும் இல்லையா ஆனால் மக்களின் அற உணர்வு வேறு விதமாக சொல்கிறது தனிமனிதனின் அறம் எது என்பது வேகமாக மாறிக் கொண்டே இருக்கிறது சட்டமும் சமூகத்தின் அறமும் அந்த அளவு வேகமாக மாறுவது இல்லை

viveksigamani
April 14, 2010 at 8:50 am (UTC 5.5)
நளினி விடுதலையின் சிக்கலே அதற்கான சிபாரிசைச் செய்வதற்கு, அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு, அரசியல் துணிச்சல் எவருக்கும் இல்லை என்பதுதான் என்று படுகிறது/////

உண்மை, இங்கு ஆட்சியில் இருக்கும் கயவர்கலுக்கு சுய கௌரவமும் கிடையது, துனிசல்லும் கிடையது. என்று இந்த மன்னுக்கு ஒரு உண்மயான தலைவன் வருவான் என்று நாங்கள் காத்து கொண்டு இருகின்றோம்.

Tharamangalam Mani
April 14, 2010 at 1:30 pm (UTC 5.5)
இந்த மாதிரியான கமண்ட்ஸ் நமது கலாச்சாரதிலிருந்து வருகிறதா? நமக்கு எப்போதுமே மறக்கவும் மன்னிக்கவும் தான் முடியுமா? இது நமது வரமா அல்லது சாபமா? நளினியை விடுவிப்பது நமது தேசத்தின் அடையாளமான சாஹிப்புத்தன்மையை காட்டுகிறதா ? (இதனுடனேயே சாஹிப்புத்தன்மையை பலஹீனமாக மற்றவர்கள் பார்க்கும் அபாயத்தையும் அடையாளம் காணலாம்) விடுவிக்காமல் போனால் அது இந்தியாவின் மாட்சியமையை காட்டுமா? பல கேள்விகள் !!

vks
April 15, 2010 at 1:01 am (UTC 5.5)
ராஜீவ் மரணம் மிகவும் முட்டால்தன்மான் முடிவு. இதில் வேதனை என்னவென்றால் ராஜிவுக்காக வேதனைப்படுபவர்கள் அவருடன் இறந்தவர்கள் குறித்து அதிகம் கவலைப்பட்டதாக தெரியவில்லை.
ராஜிவும் தமிழர்களைக் காப்பார்ருவதாக் படையை அனுப்பி புலிகளை மாத்திரமல்ல பத்தாயிரம் அப்பாவி தமிழர்களையும் அழித்துவிட்டார். அவர் செய்திகளையும் இருட்டடிப்புச் செய்துவிட்டார்.
நளினி சூழ்நிலைக் கைதி. நெஞ்சுக்கு நீதி எழுதிய கலைஞ்சர் டில்லித் தயவுக்காக நளினி விடயத்தில் எதுவும் செய்ய முடியவில்லை.

Parnon
April 17, 2010 at 5:41 am (UTC 5.5)
நளினியின் இன்றைய நிலமைக்கு இலக்கியத் துறையும் (தமிழக மற்றும் ஈழ இலக்கியம்) ஒரு காரணம். 1987 முதல் 1990 வரையான ஈழ வரலாறு, சம்பவங்கள் எவையுமே அவற்றுக்குரிய முக்கியத்துவத்தோடோ சமநிலையோடோ பதியப்படவில்லை; குறிப்பாக ஈழத்து இலக்கியவாதிகளே இதில் பெரும் தவறுக்குரியவர்கள். இந்திய ராணுவம் இருந்த போது எதுவும் சாத்தியப் பட்டிருக்காது. இந்திய ராணுவம் வெளியேறிய சிலகாலத்திலேயே மற்றுமொரு போர் மூண்டதால் அக்காலத்தைப் பதிவதற்குரிய அவகாசமோ உடனடித்தேவையோ இல்லாது போயிருக்கலாம். புலம்பெயர் எழுத்தாளர்கள் இந்திய ஆளும்வர்க்கத்துடன் பகைக்க விரும்பாததும் ஒரு காரணமாய் இருந்திருக்கலாம். ஒரு சில படைப்புகளில் நாசூக்காக சில சம்பவங்கள் (அ. முத்துலிங்கத்தின் “செல்லரம்மான்”) பதியப்பட்டனவேயன்றி ஒரு முழுமையான படைப்பு எதுவுமில்லை. சுஜாதா போன்றோரின் சில பதிவுகளிலும் ‘இடக்கரடக்கல்’ வடிவில் சிலபதிவுகள் வந்தன. குறிப்பிடும் படியாய் எதுவிமில்லை.
1987இற்குப்பின்பு (உண்மையில் 1970களுக்குப்பின்பு) பலதவறுகள் பல்வேறு தரப்பினராலும் செய்யப்பட்டிருக்கிறது. இவற்றுக்குரிய விளைவுகளை இன்றுவரை, இனிமேலும், அனுபவித்து வருகிறோம், அனுபவிப்போம்; எல்லோருமே. எந்த ஒரு தரப்பும் முற்றிலும் தூய்மையானவர்களோ, முற்றிலும் குற்றவாளிகளோ அல்லர். இன்று திலீபன், அன்னை பூபதி போன்றோர் பற்றி எத்தனை இந்தியர்களுக்குத் தெரிந்திருக்கிறது? 1987இல் யாழ் பேருந்து நிலயத்தில் எழுதப்பட்டிருந்த ஒரு வாசகம்: “காந்தி கொல்லப்பட்டது 1948இல், கோட்சேயால்; காந்தியம் கொல்லப்பட்டது 1987இல், ராஜீவால்”. எந்தவொரு கொலையையும் நியாயப்படுத்த முடியாது. ஆனால் ஒரு சம்பவம், அதற்கான காரணங்கள், அதற்குரிய பின்விழைவுகள் தொடர்பான ஆய்விற்கு வரலாறு தொடர்பான் தெளிவு தேவை. அதை ஒரு சராசரித் தமிழ்நாட்டுத் தமிழன் அடைவதற்கு வேண்டிய பதிவுகள் இல்லாதது தமிழ் இலக்கிய உலகின் குற்றமே.

vks
June 2, 2010 at 4:57 pm (UTC 5.5)
Parnon!
“ஒரு சம்பவம், அதற்கான காரணங்கள், அதற்குரிய பின்விழைவுகள் தொடர்பான ஆய்விற்கு வரலாறு தொடர்பான் தெளிவு தேவை. அதை ஒரு சராசரித் தமிழ்நாட்டுத் தமிழன் அடைவதற்கு வேண்டிய பதிவுகள் இல்லாதது தமிழ் இலக்கிய உலகின் குற்றமே.”

கடந்த இரு வாரங்களாக பிரித்தானியா சனல் 4 தொலைக்காட்சியில் ஈழப் படுகொலைகள் தத்தருபமாக படமாக்கப்பட்டு வெளியிட்டார்கள். இலங்கை இராணுவத்தின் கொடுமை அது. இந்திய மிடியா எதுவும் மூச்சே விடவில்லை. இதுவும் தமிழ் இலக்கியத்த்வாதிகளின் குற்றமா?

samyuappa
June 4, 2010 at 12:17 pm (UTC 5.5)
மீண்டும் மீண்டும் நான் நினைத்துக்கொள்வது “Truth is a pathless land” என்ற ஜெ.கிருஷ்ணமூர்த்தி – ன் வாசகத்தை. கொஞ்சம் அந்த வாக்கியத்திற்குள் பயணித்து பாருங்கள். நம் வீட்டு பிரச்சினை மட்டுமல்ல…. சர்வதேச சிக்கல்களும் நிறம் இழக்கும். கூறு கூறாக பிரிவுறும்….பிறகு ஒன்றும் மிஞ்சாது…. தீர்வு காண வேண்டும் என்று அணுகினால் “அம்பேல்” . தத்துவத்தின் சூட்சுமம் கண்ணுக்கு புலப்படாத பெரிய உண்மை…நம்மை சுற்றி சுற்றியே வரும்.

எழுதியவர் : ஜெ மின்னஞ்சல் (26-May-19, 5:48 am)
பார்வை : 10

மேலே