மனிதன் யார்,

மனப்பிறழ்ந்தவன்
யாரிடம்
பேசிக்கொண்டிருக்கிறான்?
இத்தனை சந்தோஷமாக,

அவன் உலகில் அனைத்தும்
மகிழ்வானதாகவே இருக்கிறது.
உணவோ,உடுப்போ
இருப்பிடமோ, சேமிப்போ
அற்ற அவனிடம் சந்தோஷம்,

எல்லாவற்றிலும்
இரண்டிரண்டு வைத்திருக்கும்
பைத்திக்கார மனிதன்
சோகமாகவே
இருந்தழிவதேன்?

எழுதியவர் : சபீரம் சபீரா (26-May-19, 9:29 am)
சேர்த்தது : சபிரம்சபீரா
பார்வை : 111

மேலே