துக்கம்

எங்களை,
தவிக்க
விட்டு போய்ட்டியே,
அழுதுகொண்டே
இறந்துப்போனவரின்
மோதிரத்தை
கழற்றிக்கொண்டிருந்தார்கள்,

எனை விட்டுப்போறியே
என்று மோதிரம் பற்றிய விரல்
அழுததை இவர்கள்
கேட்க முடியாமல்
போனதே துக்கம்.

எழுதியவர் : சபீரம் சபீரா (26-May-19, 9:30 am)
சேர்த்தது : சபிரம்சபீரா
Tanglish : thukkam
பார்வை : 73

மேலே