தர்மம் தந்த சங்கடம்

இன்று பள்ளி வேலையாக ஏகப்பட்ட டென்ஷன் ..... அவசர செலவிற்கு ஏடிஎம்மில் பணம் எடுத்தேன்... எல்லாம் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள்......சில்லறை வேண்டுமே என்று யோசித்துக் கொண்டிருந்தபோது.... ஒரு பெண்மணி என்னிடம் தர்மம் கேட்டு கையேந்தினார்..... சாப்பிட்டு இரண்டு நாள் ஆகிறது என்றார்.....சில்லறை இல்லாத காரணத்தினால்.... அம்மா உங்களுக்கு என்ன வேண்டும் என்று சொல்லுங்கள் அருகிலுள்ள பேக்கரியில் ஏதாவது சாப்பிட வாங்கித் தருகிறேன் என்றேன்.... அந்தப்பெண் அதற்கு மறுப்பு தெரிவித்து... பணம் கொடுங்கள் ...நானே ஏதாவது வாங்கிக் கொள்வேன் என்றார்.... சொல்லும்போதே அவள் குரலில் ஒரு அதட்டல் தெரிந்தது........ஆனால் அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை..... ஏதோ ஒரு வெறுப்பு மற்றும் பசி அவளுக்கு....
அதனால் ஹேன்பேக் முழுதும் தேடினேன் ... ஒரு பத்து ரூபாய் மட்டுமே இருந்தது.... எனக்கே சற்று மனதிற்கு சங்கடமாகத்தான் இருந்தது.... பசி என்று கையேந்தும் பெண்ணிற்கு பத்து ரூபாய் எந்த மூலைக்கு..... இருந்தாலும் இரண்டாயிர ரூபாய்க்கு சில்லறை மாற்ற அங்கு அந்நேரத்திற்கு வழியில்லை.... இரண்டாயிரம் ரூபாயை கொடுக்கும் அளவிற்கு நானும் அவ்வளவு பெரிய பரோபகாரியும் இல்லை......வேறுவழியின்றி பத்து ரூபாயை நீட்டினேன்.......
அந்தப்பெண் என்னை சற்று முறைத்துப் பார்த்து..... “பாக்க பெரிய பணக்காரிச்சி மாறி தெரியிற.....இவ்ளோ பிச்சக்காரத்தனமா பத்து ரூபா குடுக்குற.....உன் கஞ்ச புத்திக்கு நீ நல்லாவே இருக்க மாட்ட “ என்று என்னை கடுகடுத்து சாபமிட்டதும் இல்லாமல்....”இந்தப் பிச்சக் காச நீயே வச்சுக்கோ”என்றாள்....
ஒருநிமிடம் அதிர்ச்சியானேன்... பின்னர் சுதாகரித்துக் கொண்டு பணத்தை சட்டென என் பையில் போட்டுக் கொண்டு அவ்விடம் விட்டு நகர்ந்தேன்....

அட.... தர்மம் கூட பார்த்துதான் செய்ய வேண்டும் போல.....

எழுதியவர் : வை.அமுதா (26-May-19, 3:12 pm)
பார்வை : 49

மேலே