ஒற்றைக் குயிலின் ஓயாத கானம்

ஒற்றைக் குயிலின் ஓயாத கானம் .....!

நிரம்பி வழிகிறது அவள் குரல்வளை அதிரொலி
நிமிர்ந்த நெடுமலை பள்ளத்தாக்கு எங்கிலும்
தனிமையில் தகண்மையில் அறுவடை பணியில்
இழைந்து இனைதலில் அவளிசைத்த ராகம்
முந்தைய நிகழ்வுகள் விளைவித்த சோகம்
ஏகாந்த வெளியெங்கும் பொங்கிப் பாய்கிறது
இயைந்து ரசிப்போர் தணிந்து நில்லுங்கள்
இழுதையில் இகப்போர் உம்பாதையில் செல்லுங்கள்....

இராப்பறவைகள் இசைக்கா இன்னிசை கச்சேரி
ஏழுஸ்வரங்களில் அடங்கா உணரிசை அகச்செறி
வலுவிழந்து மனம்சோர்ந்த மணல்பாலை பயணத்தில்
உளம் துளிர்க்க பிறந்திட்ட வானம்பாடி இகலொலி
திரளான தீவுத் திட்டுக்கள் இடையே
ஆழ்கடல் அமைதியை மெலிதாய் குலைக்கும்
வசந்தத்தை வரவேற்கும் தேவகானக் குயில்மொழி

எவரேனும் உரைப்பாரோ அவள் பாடலின் பொருள்திறம்?
முடிவிலாத் தொடராய் அவளிசைத்த பாசுரம்
இதயத்தில் கிளர்ந்தெழுந்த ஆழ்மனத் துயரமோ...?
என்றோ எங்கோ நடந்தேறிய பெரும் போரில்
ஈடுசெய்ய இயலா அவள் இழப்பின் வலியோ..?
இன்றையப் பொழுதுகளில் ஈடேறாது
அன்றாடம் அவள்படும் இன்னல்களின் சலிப்போ...?
ஏதோவொரு தவிப்பே அவள் பாடலின் லயிப்போ...?

அசைவற்றுச் சிலையாய் ஆசுவாசமற்று அமைதியாய்
இசை பொழிந்த திசை நோக்கி நின்றேன்
ஓசையில் ஒடுங்கி ஓயாது குனிந்து
ஆசைகள் முடங்கி அவள் அறுவடையில் திளைத்தாள்
விசை தளராது அவளசை போட்டப் பாடல்
நசைகொண்டு என்தசை நார்களை சிலிர்த்தது
வெகுதூரம் விரைந்தும் பலகாலம்
கடந்தும்
இதயத்தில் விலகாது ரீங்காரம் இட்டது...,,!

கவிதாயினி அமுதா பொற்கொடி

Wordsworth எழுதிய “The solitary Reaper” பாடலை முடிந்தவரை தமிழாக்கம் செய்துள்ளேன்....

எழுதியவர் : வை.அமுதா (26-May-19, 3:14 pm)
பார்வை : 92

மேலே