தெள்ளமுது

தென்னங்கீற்றாய் கிழிக்கிறாய் உன் மைக்கொண்ட பார்வையால்
மின்னல் கொண்டு வெட்டுகிறாய் உன் புருவங்கள் மத்தியில்
நாற்று நடும் ஸ்பரிசமே நெஞ்சை மோதி தான் போகிறாய்
காற்றில் கலக்கும் வாசமாய் கரைந்து தான் போகிறேன்
மதி மயக்கும் மார்கழியே பூந்தென்றலாய் கடக்கிறாய்
பௌர்ணமியின் வெளிச்சமாய் என்னில் நீ படர்கிறாய்
சிந்தி தான் போகிறேன் சிதற வைப்பவள் நீ ஆகிறாய்
தடுமாறி நிற்கிறேன் என்னை தாக்கும் மாயை ஆகிறாய்
தேன்கிண்ணம் உன்னை நான் திகட்டாமல் பார்க்கிறேன்
கூழாங்கல் குழியழகாள் உன் கண்ணம் தான் சிவகுத்தடி
பச்சை இலை பால் மேனி கண்கள் தான் கூசுதடி
காற்றை கண்டு கோபம்மடி உன் சுவாசம் நான் ஆக கூடாதோ
நீ ஒதுக்கும் கூந்தல் நுனி என் ஜென்ம பயனை அடைந்ததடி
வர்ணங்கள் பல இருந்தும் நீயே அழகனாய் என் தெள்ளமுதே !!!

எழுதியவர் : ஹேமாவதி (26-May-19, 3:32 pm)
சேர்த்தது : hemavathi
Tanglish : thellamuthu
பார்வை : 175

மேலே