புரியாத புதிர் அவள்

அடங்காதவள்...
திமிர் பிடித்தவள்...
அவளை
கண்டுகொள்ளா விட்டால்
வார்த்தைகளில்
கத்தி வீசுபவள்
கண்டு கொண்டால்...
பார்வையில் வார்த்தைகளை
வீசுபவள்...
அமைதியான முகம்தான்..
கண்களில் கூர்மை..
ஆனால் கண்களில்
கருமேக கூட்டம்...
எப்போது வேண்டுமானாலும்
மழை பொழியலாம்...அங்கு.
கண்ணீரில் கரையவைத்து
விடும் வித்தை தெரிந்தவள்...
புரியாத புதிர்..
அவள்.
@@@ரூபன் புவியன் @@@

எழுதியவர் : ரூபன் புவியன் (26-May-19, 8:35 pm)
சேர்த்தது : Ruban puviyan
பார்வை : 453

மேலே