தாலாட்டு

அழகே அற்புதமே அகண்ட தீபப்பெரும் விளக்கே
ஆழியில் கண்டெடுத்த அரிதான கற்சிலையே

இப்பிறவியில் எனக்கு வாய்த்த இன்பந்தரும் ஏந்தலே
ஈடில்லா எழில் வேந்தே என்னருமை சித்திரமே

உறவுக்கு பாலமான உறுதியான காசரையே
ஊற்றுப்போல் எந்நாளும் வாட்டம் போக்கும் தண்ணீரே

எல்லையின்றி இன்பந்தந்த எம்குலத்தின் பொற்குடமே
ஏழிசையின் பிறப்பிடமே என் இதய ஒத்தடமே

ஐராவத அழகையே அள்ளி வந்த அருட்கொடையே
ஒப்பற்ற உயிர்த்துடிப்பே ஒய்யார அணிவகுப்பே

ஓரேழு பிறவியிலேயும் ஓங்கி நின்ற இலக்கணமே
ஒளடதமாயாகியே அன்னைக்குதவிய செம்பொன்னே.
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (27-May-19, 7:37 am)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : thaalaattu
பார்வை : 98

மேலே