அவளே எல்லா இடங்களிலும்

அவளே எல்லா இடத்திலும் 💃

அதோ அவள் நிலவில் தன் முகம் காட்டுகிறாள்
இதோ இந்த வீனையில் சப்தஸ்வரமாக கேட்கிறாள் .
அதோ அங்கே வானத்தில் நட்சத்திர குவியலாக சிரிக்கிறாள்.
இதோ இங்கே அழகிய நாணலாய் ஆற்றங்கரை ஓரம் வளைந்து, நெளிந்து அசைந்தாடுகிறாள்.
அதோ அந்த மேக கூட்டத்தின் இடையே மறைந்து, மறைந்து என்னை பார்க்கிறாள்.
இதோ இங்கே நந்தவனத்தில் பூக்களில் தேனாய் இனிக்கிறாள்.
அதோ அந்த மலை
உச்சியிலிருந்து அருவியாக கொட்டுகிறாள்.
இதோ இந்த வயல் வெளியில் நெற்கதிர்களாக வெட்கத்துடன் தலை குனிந்து நிற்கிறாள்.
அதோ அவள் என் பெயர் சொல்லி அழைக்கிறாள்.
இதோ நான் ஆவலுடன் புறப்பட்டேன் அவள் கரம் பற்ற.
- பாலு.

எழுதியவர் : பாலு (27-May-19, 3:46 pm)
பார்வை : 483

மேலே