முதுமொழிக் காஞ்சி 77

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
உண்டி வெய்யோர்க்கு உறுபிணி யெளிது. 7

- எளிய பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால், உணவை மிகுதியும் விரும்பி பெருந் தீனி தின்போர்க்கு பலவேறு வகைப்பட்ட மிக்க நோய் எளிதில் வந்தடையும்.

'மீதூண் விரும்பேல்' என்பது ஔவையின் வாக்கு. - ஆத்திசூடி.

இழிவறிந்(து) உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய். 946

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும். 947 மருந்து

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-May-19, 9:55 pm)
பார்வை : 43

மேலே