முழுமையாய் அமலுக்கு வருவது எப்போது

விவசாயிகள் மாண்டபோது வாழவைக்காத வாழைக்கு
இன்று தான் எத்தனை கிராக்கி
அதை வாங்கச்சென்று பையில் அள்ளி வந்தவள்-இன்று
வரிசையில் வெறும் கையோடு...
அட...
நெகிழிக்காய் நெகிழ்ந்தவன் எல்லாம் இலையை விலைபேச
நேராய் தோட்டத்திற்கே...
அட...
மனிதனுக்கு மாறாக வரிசையிலே
தலைமுறை பேசுது அது வளர்ச்சியிலே...
அட...
உழவன் உழைப்பது விளையுது
உழவன் உழைப்-பது விளங்குது
அப்பவும் மனம் நாடிது அந்த
நெகிழிப்பைக்கு எங்காவது வாய்ப்பிருக்கானு- ஆனாலும்
சட்டங்கள் தான் சாயங்கள் போக்குமென்றால்...
நாம் இருவர் நமக்கொருவர்,
தலைக்கவசம் உயிர்க்கவசம்,
குடி குடியைச் கெடுக்கும்,
புகை நமக்குப் பகை- எல்லாம்
முழுமையாய் அமலுக்கு வருவது எப்போது???

எழுதியவர் : மீனாட்சி மோகன்குமார் (27-May-19, 11:08 pm)
பார்வை : 77

மேலே