நிழல் ஓவியம்

சற்று முதிர்ந்த முகம்
அதற்கேற்ற முகபாவனை
நடுத்தர நிறம்
ஆனால் மேல்தட்டு பாவனை
எங்கோ பார்த்த முகச்சாயல்
பல நாள் கேட்ட குரல்வலையின் குரல்
இவ்வுருவ நிழல்
என்னுடன் நீண்ட நாள்
பயணித்ததாக ஒரு அனுமானம்
தயங்கி போய் கேட்டேன்
நீங்க " ராஜு " தானே ....
சொல்லு மச்சி எப்படி இருக்க
என்ற பதில் தொனியில்...
என் பள்ளிப்பருவ நட்பு
பல்லிளித்துக் கொண்டது ...

எழுதியவர் : வருண் மகிழன் (29-May-19, 3:48 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
Tanglish : nizhal oviyam
பார்வை : 408

மேலே