காதல் கீதம்

மல்லிகைத் தோப்புக்குள்ளே
மனதாலே தூண்டி போட்டு
கண்ணாலே சுண்டி இழுக்கும்
என் சின்ன மச்சானே....(பெண்)

கூட சுமக்கையிலே ஓடி வந்து
உதவாத கோட்டு சூட்டு போட்ட
சின்னமச்சான்....(பெண்)..

ஒத்தையாக நான்
சுமக்கையிலே ஓரமாக
நின்று ரசித்த சின்ன
மச்சானே...................(பெண்)

ஓடி வந்திருப்பேன் நான்
மட்டும் வந்திருந்தால்
கூட வந்தவனோ
தொல்லையான நண்பனடி...(ஆண்)

பூவாட்டம் நீ இருக்க தேனீயாக
வந்திருப்பேன் என் நண்பன்
வில்லனடி அவன் பொல்லாத
கள்ளனடி......(ஆண்)

குண்டு மல்லித் தோப்புக்குள்ளே
நானும் ஒத்தையாக இல்லை
மச்சான் உட்காந்து இருக்காள்
என் தங்கையவள் மச்சானே...(பெண்)

பூவாட்டம் நான் இருந்தாலும்
தேனீயாக நீ வந்தால் பொல்லாத
வம்பு மச்சான்...(பெண்)

நித்தம் நித்தம் பார்வையிலே
என் நெஞ்சுக்குள்ளே வந்த
மல்லிகை எடுக்க வந்த அல்லி
ராணியே என் பித்தமது கலங்கி
போச்சுடி அல்லி ராணியே(ஆண்)

ஆ........ஆ........ஆசை அது ஓசை
இன்றி ஊர் அறியாமல் ஊந்து
செல்கின்றது ஓராயிரம்
கனவுகளும் ஓயாமல் வருகின்றது
ஓயாது ஓயாது நம் ஆசை தேயாது
தேயாது நம் நேசம் ...ம்.....ம்....ம்(இருவரும்)

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (1-Jun-19, 2:15 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : kaadhal keetham
பார்வை : 197

மேலே