ஆண்மகன்

காரில் இருந்து இறங்கி தற்செயலாக எதிர் புரம் பார்த்தான் கார்த்தி.
செதிக்கிய சிலையாய் அவள் நின்று இருந்தாள். சிறிய அளவான நாசி. பட்டாம்பூச்சி இறக்கையாய் படபடக்கும் கண்கள். நேர்பார்வை என்றாலும் கண்மணி களின் நடனம் தன் கண்களை கவர்ந்து இழுத்து மயங்க வைத்தது.
கழுத்தில் சிறிய அளவிலான தங்க நகை. அதன் கீழே வேண்டாம் நாகரிகம் இல்லை. தன் பார்வையின்தேடல் அவள் உணர்வைஉருத்தியதோஎன்னவோ நேராக என்னை பார்த்தாள்.
சிறிதும் சலனப்படாமல் என்னை நோக்கி வந்தாள். எனக்குள்எண்ணற்ற எண்ணங்கள் சூறாவளி யாய் சுழன்று அடிக்க
என்ன சார் வேணுமா?என்றாள்.
டக் கென்று என் முகம் மாறியது.
என்ன வேணுமான்னு கேக்கறீங்க?யாரு நீங்க?
அட புதுசா. பழக்கம் இல்லையா?
எனக்கு புரியவில்லை பிளீஸ் என்றேன்.
ஓகே. நான் ஐஸ்ட் உங்களுக்கு கம்பெனி கொடுக்கலாம் என்று...
சாரி மேடம். நீங்க ரொம்ப அழகாக இருக்கீங்க. அதனால உங்களை பார்த்தேன். எனக்கு கம்பெனி வேண்டாம்.
ஓ சாரி உங்களை தொந்தரவு செஞ்சதுக்கு மன்னிக்கவும்.
இதுக்கு எதுக்கு மன்னிப்பு. உங்க டூட்டியைநீங்கபாக்கிறீங்க.
சார் என்ன தப்பா நினைக்கலையா?
தப்பாவா?உங்களுக்கு இதுஒரு ஜாப் பிடிச்சதோ பிடிக்கலையோஅதுஉங்களோட வாழ்க்கை.பெஸ்ட் ஆப் லக். திரும்பிநடந்து சென்றான்.
அவனையே பார்த்து கொண்டு இருந்தவளின் மனதில் முதல் முறை யாக ஒருஆண்மகனை பார்த்த மகிழ்ச்சி மனதில் தோன்றியது.

எழுதியவர் : (2-Jun-19, 6:31 pm)
சேர்த்தது : ராமஜோதி சு
Tanglish : aanmagan
பார்வை : 125

மேலே