எழுத்து தள தோழர் தோழமைகள் அனைவருக்கும் ----------------------படித்ததை பகிர்கிறேன்

..
எழுத்து தள தோழர் தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்,

இங்கே பதிய போவதை பார்க்காமலே
தயவு செய்து யாரும் தங்களுடைய பகிர்வை பகிர்ந்து விடவோ அல்லது கருத்து பதிந்து விடவோ வேண்டாம்..

மேலும்
இங்கு சொல்லப் பட்டவை யாரையும் புன்படுத்துவன அல்ல
இது வெறும் கற்பனையே என்று சொல்லும் முட்டாளும் நான் அல்ல...

மேலும்
வெறும் மொய்யெழுதும் வாசகம் மட்டும் அல்ல இது...
அதையும் தாண்டி யோசிக்க வைக்கும் ஒரு எண்ணம் இது...

இப்போது நாம் யோசிக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாகவே கருதுகிறேன்...
இதை இந்த தளத்தார்கள் தவறாக புரிந்துக் கொள்ள மாட்டார்கள் என்றும் நன்புகிறேன்..

பொதுவாக இங்கு வருபவர்கள் யாருக்கும் வேலை இல்லாமல்
வெட்டியாக சுத்திக் கொண்டிருப்பவர்கள் வருவது இல்லை என்று நினைக்கிறேன்..
(இதில் வேலை தேடி கொண்டிருப்பவர்களை மதிக்கிறேன்... அவர்களை நான் சொல்ல வில்லை என்று
சொல்லி கொள்கிறேன்... அப்படியும் வருகிறவர்கள்... இன்னும் பாராட்டுக்கு உரியவர்கள்..)

இப்படி
குடும்பத்தின் ஆசைகளை துறந்து
வேலை பளுவை மறந்து
இங்கு வருபவர்கள்
வெறும் வேடிக்கை மட்டுமா பார்க்க வருவார்கள்? இங்கு...

மாறாக என் தாய் மொழியில் ஒரு தளம் இருக்கிறது
அங்கு சென்றால் என்னால் முடிந்த வரை
என்னால் கற்று கொள்ள முடியும்
என்னால் இயன்ற வரை கற்றுக் கொடுக்கவும் முடியும்
என்ற உயரிய நோக்கத்தில் வருபவர்கள்தான் அதிகம்...

இன்னும் நான் உறுதியாக நம்பிக் கொண்டிருக்கிறேன்
இப்படி பட்ட மொழி சிந்தனை அல்லது
மொழி பற்று உள்ளவர்கள்தான் இந்த தளத்தை இயக்கி
கொண்டிருக்கிறார்கள் அல்லது இயங்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று
நம்புகிறேன்...

அப்படி வருபவர்களுக்கு இங்கு என்ன கிடைக்கிறது?

தமிழ் மேல் நாட்டம் இல்லாதவர்களுக்கு இந்த தளம்
எப்படி வடிகாலாகும்?

அப்படி தமிழ் மேல் நாட்டம் இல்லாதவர்கள் இந்த தளத்தில்
புகுந்து வேறு திசை திருப்ப நினைத்தால் இதை
தளம் தாங்கி கொண்டாலும் இதில் படித்து ரசிக்கிறவர்வர்கள்
பொறுத்துக் கொள்வார்களா? என்பதே எனது கேள்வி?

இங்கு வருகிறவர்கள் யாரும்
தவறான எண்ணத்தோடு வருவது கிடையாது....

வருபவர்கள் யாவரும்
தமிழ் மேல் ஈடுபாடு கொண்டவர்கள்
அல்லது தமிழ் மேல் ஆர்வம் கொண்டவர்கள்...

அப்படி இருக்கும் போது
ஒரு தனி நபர் தமிழை தரக்குறைவாக எழுதும் போது
அல்லது பேசும் போது அந்த தமிழ் எதற்கு
அல்லது இந்த தளம் எதற்கு?
என்று கேட்க தோன்றுமா இல்லையா?

இதில் இணைந்திருக்கும் பல பேருக்கும் தெரியும்
நாம் தமிழால் இணைந்திருக்கிறோம் என்று...

ஆனால்
அந்த புனித தன்மை கெடுக்கும் வகையில்
ஒரு சிலர் நடத்தும் நாடகத்தில் எல்லோரும் நடிகர்கள் ஆகி விடுகின்றனர்...

இதில் கொடுமை என்ன வென்றால்
சில கதா நாயகர்களும் வில்லன்களாகி விடுங்கின்றனர்...

இங்கு வரும் எல்லாருமே தமிழை வளர்க்க வருகிறார்கள்
என்று நினைத்திருந்தேன் ஆனால்
அதை தவிர்த்து எல்லாவற்றையும் வளர்க்க வருகிறார்கள்
என்றால் இந்த இடம் அதற்கு பொருத்தமானதா?

இங்கு வரும் எல்லாருமே
ஒரு விதத்தில் கலைஞர்கள்/இளைஞர்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்...

ஆனால் சில பதிவுகளை பார்த்த பிறகு
நாங்கள் இதில் எந்த பகுதியிலும் சேராதவர்கள்...
எனக்கும் தமிழுக்கும் ரொம்ப தூரம் என்பதாக இருக்கிறார்கள்...

அப்படி யோசிக்கும் சில தோழர் தோழமைகள்
வேறு எங்காவது சென்று தங்கள் மனக் குறையை தீர்த்து கொள்ளலாமே...
ஏன் எங்களிடம் அல்லது இந்த தளத்திடம் வந்து இச்சையை தீர்த்துக் கொள்கிறீர்கள்...?

நாங்கள் வேறு திசை நோக்கி பயணம் போகிறோம்
அதுவும் உங்களிடம் சொல்லி விட்டுதான்...
ஆனால்
அது தெரிந்து கூட
எப்படி தமிழ் வளர்ந்து விடும் ?
அதை எப்படி வளர விடுவோம்?
என்று போட்டிக் கொண்டு வந்தால் எப்படி?

எந்த விமர்சனம் என்றாலும் நேருக்கு நேராக வையுங்கள்..
உங்கள் பெயரையும் ஊரையும்
யாருக்கு மகன் என்றும்
தெளிவாக சொல்லுங்கள்...

இதில் மூடி மறைக்க என்ன இருக்கிறது...
எனது அப்பா பெயரை சொல்ல
எனக்கு எந்த தயக்கமும் இல்லை...
எனது அம்மா மொழி (தாய் மொழி) தமிழ் என்று சொல்ல
எப்போதும் நான் தயங்கியது இல்லை...
என் முகத்தை காட்ட எப்போதும் மறுத்ததில்லை...

பிறகு எதற்கு இந்த பிதற்றல்கள்?

உங்கள் சுய விவரத்தை காட்ட துணிவில்லாவதவர்கள் கையில்
எப்படி எங்கள் வருங்காலத்தை சமர்பிக்க முடியும்?

தமிழ் பேசும் எல்லோரும் ஒரு விதத்தில்
அண்ணன் தம்பிகள்தானே...
அல்லது சகோதர சகோதரிகள்தானே...
இதில் என்ன வெக்கம் இருக்கிறது... பெயரை மாற்றி வைத்துக் கொள்ள?

ஒரு வேலை பெயரை மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்
அது தங்களுக்கு பிடித்த பெயராக இருக்கட்டும்...
அப்படி பெயரை மாற்றி வைத்து கொள்ளும்போது
உங்களின் மொழியை மாற்றி வைத்துக் கொள்ள முடியுமா?

இங்கு
யாரை திட்டுகிறீர்கள்?
யாரை குறை சொல்கிறீர்கள்?
யாரை விரட்டுகிறீர்கள்?
யாரை வெளி ஏற்றுகிறீர்கள் ?

ஒரு தமிழனுக்கே ஒரு தமிழன் இப்படி பட்ட செயல் செய்தால்
யார் தமிழனை காப்பாற்றுவார்கள்?
(இதில் எனது தாய் மொழி தமிழ் என்று பெருமையாக போட்டுக் கொள்வீர்கள்...
அது வேற கதை )
ஆனால் வேறு எங்காவது இலங்கையிலோ அல்லது
வேறு எங்காவது தமிழருக்கு ஒரு பிரச்னை என்றால்
எப்படி எல்லாரும் ஒன்று கூடுகிறீர்கள்?
இது வெட்கமாக தோன்ற வில்லையா?

இங்கு வருபவர்கள் யாவரும் தங்களது
எவ்வளவு சொந்த பந்தத்தை விட்டும்
தங்களது நேரத்தை செலவிட்டும் வருகிறார்கள்
என்று சொன்னால் புரியுமா உங்களக்கு?

அப்படி வந்து பார்க்கும் போது சில
பதிவுகள் என் தாய் மொழியை களங்கப் படுத்தி எழுதி இருப்பதைக் கண்டு
யாரால் பொறுமையாக இருக்க முடியும்?

ஒருவேளை அதையும் தாங்கி கொள்ளும் சக்தி
யாருக்காவது இருக்குமென்றால் அதை
அவர்கள் தாயை தரக்குறைவாக பேசியவரையும்
மகான் என்று சொல்ல கூடும்....

தமிழ் மேல் உணர்வு கொள்ளாதவர்கள்
இந்த தளத்திற்கு தகுதி இல்லாதவர்கள் என்று நினைக்கிறேன்...

அவர்களுக்கு பொழுது போக வில்லை என்றால்
ஏதாவது முகநூல் அல்லது அப்படி பட்ட சமூக வலைத்தளங்கள்
ஏராளமாக இருக்கிறது...

அதை விடுத்து
இந்த தளத்தையும்(இங்கு மட்டுமல்ல) நம் தமிழையும் தயவு செய்து அசிங்க படுத்த வேண்டாம்...

எவ்வளவு பெரிய
உலகம் போற்றும் மொழியை நாம் பேசுகிறோம் என அறியாதவர்கள்தான் தமிழர்கள் (நாம்) எனவும்...
தமிழை தமிழர்களாலே கெடுக்க படுவதாகவும் உலகம் நம்மை காரி துப்புகிறது...

இதற்கு எடுத்துகாட்டாக நாமும் இங்கு
செயல் படுகிறோம் என்று நினைக்கும் போது
மனம் வருத்தம்தான் அடைகிறது...

இதில்
பெயர் மாற்றம் மட்டும்தான் ஒரு சுகம் என்றால்
எல்லோரையும் ஏமாற்றுவதுதான் ஒரு செயல் என்றால்..
எல்லோரையும் திட்டுவதுதான் ஒரு பழக்கம் என்றால்...
எல்லோரையும் கேவலப் படுத்துவதுதான் உங்கள் பொழுது போக்கு என்றால்...
எல்லோரையும் காயப் படுத்துவதுதான் உங்கள் எண்ணம் என்றால்...
அதற்கு தமிழை தயவு செய்து பயன் படுத்தாதீர்கள்...

அதற்கு வேறு தளம் இருக்கிறது
அதற்கு வேறு இடம் இருக்கிறது...

தளத்தார்க்கு ஒரு கேள்வி...

தளத்திற்கு உறுப்பினர்கள் ஆகாமல்
கருத்து போட முடியாதல்லவா?
அப்படி ஒரு அருமையான முறை வைத்திருக்கும்போது
ஏன் உறுப்பினர் ஆகும்போது அவர்களின் ஆதாரத்தை (ID proof )
வாங்காமல் உள்ளே அனுமதிக்கிறீர்கள்...?

இப்போது இந்தியாவில் எதற்கு எடுத்தாலும் அதை கேட்கிறார்களே...

இப்படி பட்ட பிரச்சனையில் நாம் எத்தனை
நல்ல எழுத்தாளர்களை இந்த தளம் இழந்து இருக்கிறது என்று
நான் சொல்ல தேவை இல்லை என்று நினைக்கிறேன்...

அது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான் எனவும் கருதுகிறேன்...
அப்படி சிறந்த எழுத்தாளர்களை இழந்து விட்டு
நாம் என்ன செய்ய போகிறோம் நாம் தனித்து நின்று...

ஒரு சம்பவம் உங்களுக்காக...

நமது மகாத்மாவை அரை நிர்வாண பக்கிரி என்று சொன்ன
வின்சென்ட் சர்ச்சில் (அன்றய ஆங்கிலேய அரசன்/தலைவன்)
ஆனால் அவரை பற்றி புரிந்து கொண்ட பிறகு எப்படி எல்லாம்
மன்னிப்பு கேட்டான் என்பது நமது வரலாறு...

ஒரு தேசத்துக்கு எத்தனையோ தலைவன் வரலாம்
ஆனால் தேசத்துக்கு ஒரே ஒரு பிதாதான் அது நமது தேசப் பிதா காந்தி..

இங்கே திட்டியவனை இந்த உலகம் போற்ற வில்லை
மாறாக
மன்னித்தவனை அல்லது பொறுத்துக் கொண்டவனை
இந்த தேசமே/உலகமே போற்றியது ஒரு மகாத்மாவாக....

இதை எதற்காக சொல்கிறேன் என்றால்

எல்லா நேரத்திலும்
நீங்கள் அடிக்கும் போது கன்னத்தை காட்டுகிறோம்...
மீண்டும் நீங்கள் அடிக்கும் போது மறு கன்னத்தையும் காட்டுகிறோம்
ஆனாலும் நீங்கள் அடிக்கும் போதெல்லாம்
கன்னத்தை காட்டுவதற்காகவே எங்கள் கன்னம்
படைக்கப் பட்டதாக மட்டும் எண்ணி கொள்ளாதீர்கள்

வாழ்க தமிழ்
வளர்க தமிழர்கள்...

நட்புடன்...
ஜின்னா.

====================================================================================================
தங்கள் கருத்துக்களை இங்கு பதிவேற்றுங்கள்...
user photo
சி எம் ஜேசு பிரகாஷ் • 17-Jan-2019 10:06 pm
வாழ்த்துக்கள் ஜின்னா
நல்லெண்ண பதிப்பிற்கு வாழ்த்துக்கள்

தமிழை தாய்த்தமிழை அழகிய சொற்றொடர்களால்
அலங்கரிப்பவர்களே மதிப்பு மிக்கவர்கள் - அதை

பழகிய வார்த்தைகளால் அலங்கோலப்படுத்துபவர்கள்
தமிழை நேசிக்க இயலுமா என யோசிக்க தோணுகிறது

Reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
முத்துகிருஷ்ணன்-ராமச்சந்திரன் • 05-Feb-2017 11:13 am
வாழ்க தமிழ்
வளர்க தமிழர்கள்... அருமை, நம் தாய் மொழியாம் தமிழோடு, தமிழர்களும் வளர்க - மு.ரா.

Reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
செ செல்வமணி செந்தில் • 09-Dec-2015 7:35 pm
மன்னிக்கவும் வேறு பக்கத்தில் பதிவிட வேண்டியதை மாற்றி பதிவிட்டுவிட்டேன் :

Reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
செ செல்வமணி செந்தில் • 09-Dec-2015 7:32 pm
நான் மிகவும் கர்வம் கொள்கிறேன் !!! இப்படிப்பட்ட உறவுகளுக்குள் நான் ஒருத்தியாய் இருக்கிறன் என்பதில் !
தம்பி திருமூர்த்தி நீ நிச்சயம் வெல்வாய் ஜின்னா தோழரை போன்றோர் உன்னுடனிருக்கையில் !

Reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
செ செல்வமணி செந்தில் • 09-Dec-2015 7:07 pm
தோழரின் உணர்வுகளையும் ,ஆதங்கங்களையும் நான் முழுமையாக மதிக்கிறேன் !
மேலும் மாற்றம் நிகழுமென நம்புகிறேன் ! நன்றி

Reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
திருமூர்த்தி • 07-Dec-2015 6:51 pm
அனுபவ வார்த்தைகளுக்குள் எத்தனை எந்தனை நிஜங்கள்..!
கண்டிப்பாக ID முறை கொண்டுவந்தால் சிறப்பு..!

Reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
ஜின்னா • 08-Dec-2015 12:24 am
மிக்க நன்றி தம்பி...
தங்களின் புரிதலுக்கு நன்றிகள் பல...

reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
ஜி ராஜன் • 07-Dec-2015 3:08 pm
நண்பர் ஜின்னாவின் ஆதங்கமும் அதற்கு திரு ராஜேஷ் குமார் அவர்களின் விளக்கங்களும் நமது எழுத்து தளம் இனியும் சீரிய முன்னேற்றம் காண அனைத்து முயற்சிகளும் செய்யப் படும் என்கிற நம்பிக்கையைத் தோற்றுவிக்கிறது. நன்றி ஜின்னா & தோழர் ராஜேஷ் குமார்.

Reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
ஜின்னா • 08-Dec-2015 12:21 am
அந்த நம்பிக்கையில் எழுத பட்டதுதான் சார்...
பார்ப்போம்... அவர்களால் முடிந்த அளவு செய்வார்கள் என்று நினைக்கிறன்...
இது ஒரு பொது தளம் என்பதால் நம்மால் சொல்லத்தான் முடியும் செய்ய முடியாது...
அது அவர்களின் கையில் தான் இருக்கிறது...

reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
shanthi-raji • 06-Dec-2015 10:37 pm
உங்கள் கருத்தை நானும் வரவேற்கிறேன் தோழமையே

Reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
ஜின்னா • 07-Dec-2015 4:03 am
மிக்க நன்றி தோழமையே...
தங்களின் வரவேற்பிற்கு நன்றிகள் பல...

reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
PJANSIRANI • 06-Dec-2015 9:37 pm
தோழரே! நானும் இந்த எழுத்து பகுதியில் ஒரு அங்கமாக இருக்கிறேன். இத்தளத்தை உறுப்பினர் அல்லாத மற்றவர் தாங்களுக்கு ஏதாவது பயனுள்ள சில பகுதிகளைக் காண முற்பட்டால் கேவலம். நாம் எல்லாம் சமுதாயத்தைப் பற்றிய இன்னல்களை ,சீர்கேடுகளை கவிதைகளாக, கதைகளாக , கட்டுரைகளாக வடித்து சமுகத்திற்கு எடுத்துக் கூறும் சீர்திருத்த வாதிகளாக இருக்கிறோம். ஆனால், நமக்கே நிறைய புத்திமதிகள்
தேவைப்படுகிறது. புள்ளிகள் ஆயிரக்கணக்கில் பெற்று என்ன பயன்?
இவர்களுக்கு பண்புகள் இல்லையே? எழுத்து தளம் சரியல்லை என மற்றவர் கூறும்முன் இத்தளத்தின் தலைமை இவர்களின் உறுப்பினர் தகுதியை ரத்து செய்தால் நலமாய் இருக்கும். அதுதான் மிகச் சரியானது.
இப்படிப்பட்ட செய்திகளை வலைதளத்தில் பதிவிடுவதை வன்மையாக கண்டிக்கிறேன் !

இனி இப்படிப் போன்றவர்கள் எல்லாம் கவிதை என்றப் பெயரில் கருத்துக் கூறுவதை நிறுத்தி விடக் கூறுங்கள்!!! அதுவே மற்றவர்கள் கெடாமல் இருப்பதற்கு வழி!

Reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
ஜின்னா • 07-Dec-2015 4:04 am
மிக்க நன்றி தோழமையே...
தங்களின் புரிதலுக்கு நன்றிகள் பல...

reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
மினி • 06-Dec-2015 8:15 pm
நான் கருத்திடாமல் இருப்பது சந்தோஷ் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க....அதை தங்களுக்கு சாதகமாய் பயன்படுத்தி kola வேண்டாம் குமரேசன் அவர்களே..குரங்கு குட்டி அடுத்த வாரம் வருவார் என அவரே தனது என்ன பகுதியில் வெளியிட்டு சென்ருகிறார்..பெண்களிடம் வீரம் வேண்டாம் விவேகம் போதுமானது..

Reply Vote Up Vote Down 1 வாக்குகள்
user photo
காயத்ரிசேகர் • 06-Dec-2015 7:24 pm
தோழரே...சற்று நேரத்திற்கு முன் சில பகிர்தல்களையும் படைப்புகளையும் கண்டேன்...உண்மையில் நெஞ்சு குமுறுகிறது... சிலரின் செயல்கள் சினம் கொள்ள செய்கிறது...மாற்றம் தேவை,

Reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
ஜின்னா • 07-Dec-2015 4:03 am
மிக்க நன்றி நண்பரே...
தங்களின் புரிதலுக்கு நன்றிகள் பல...

reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
இரா-சந்தோஷ் குமார் • 06-Dec-2015 7:12 pm
உங்கள் கருத்தை வரவேற்கிறேன் தோழர் ஜின்னா.

Reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
ஜின்னா • 07-Dec-2015 4:03 am
மிக்க நன்றி நண்பரே...
தங்களின் ஆமோதித்தலில் மகிழ்கிறேன்.

reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
குமரேசன் கிருஷ்ணன் • 06-Dec-2015 2:47 pm
இந்த எண்ணம் பதிவிட்ட நண்பர் ஜின்னாவிற்கு தமிழனாய் என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள்..

பிறந்தது முதல் இறப்பு வரை ஆண் ,தாய், சகோதரி, தோழி, மனைவி, மகள் என்ற பெண்களுடன் பயணப்படுகிறான் , ஆணின் உயர்வினில் ஏதாவதுஒரு பெண் ஆதாரமாய் நிற்கிறாள்,

இத்தளம் எனக்கு அன்னையை, சகோதரியை, தோழியை, தந்தையை, தமையனை , தோழனை உறவாக தந்திருக்கிறது..

சமீப காலமாக எழுத்தின் இறையான்மையை குலைக்கும் வண்ணம், விஷ ஐந்துக்களும், மிருக மூகமூடி பூசிய மனித மிருகங்களும் ,எழுத்தினில் நுழைந்து பல எண்ணம் பதித்து பலரை காறி உமிழ்வதும், பெண்களின் மின்னஞ்சல் வழியே பல தொல்லைகள் தருவதும் வாடிக்கை ஆகிவிட்டது..

எழுத்து தளம் முதலில் களையாய் நிற்கும் முகமூடி மனித முகங்களை வெளியே கொண்டு வரட்டும்,
எழுத்துக்குள் வரும் எவரும் உண்மையான முகத்துடன் உலாவர ஒவ்வொருவரின் அடையாளம் (id proof) கட்டாயம் எழுத்துக் குழுமத்தால் வாங்கப்படவேண்டும்,

கீழ்த்தரமான கருத்துக்களை பதிவு செய்பவர்கள் இதனால் களையெடுக்கப்படலாம், பெண்கள் சுதந்திரமாக எழுத முகமூடி மிருக நடமாட்டத்தை நசுக்குங்கள்..

அன்று ராம்வசந்த் வெளியேறினார், இது தொடர்ந்தால் இன்னும் நிறைய நண்பர்கள் வெளியேறும் நிலை உருவாகும்,

தமிழனாய் நண்பர் ஜின்னாவின் உணர்வுகளை உணருங்கள்..

வாழ்க தமிழ்...வெல்க நல் எண்ணங்கள்..

நட்புடன் குமரேசன் கிருஷ்ணன்.

Reply Vote Up Vote Down 1 வாக்குகள்
user photo
Rajesh Kumar • 06-Dec-2015 3:47 pm
இது சாத்தியமில்லை தோழரே. நிர்வாக ரீதியாகவும் சரி, செயல் ரீதியாகவும் சரி. ஒருவன் போலி அட்டவனை கொடுத்தால் எப்படி சரி பார்க்கமுடியும். ஒவ்வொருவரும் தொலை பேசி என் சரி பார்கப்படவரே, அதிலிருந்து அவர்களை அடையாளம் கண்டறிவது சுலபமே.
மேலும் ipaddress என்பதும் அவர்களை கண்டறிய உதவும்.

மேலும் பெண்கள் நிறைய பேர் அவர்களுடைய பெயர், முகவரியை வெளியிட விரும்பவது இல்லை. கொடி (FLag option) பயன் படுத்துவதை உறுபினர்கள் உணர வேண்டும்.

போலிகளை மேலும் களைய எழுத்து login விரைவில் எழுத்துவில் ஹியாக்ஸ் login இணைக்கப்படவுள்ளது.

reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
குமரேசன் கிருஷ்ணன் • 06-Dec-2015 4:16 pm
நன்றி நண்பரே தங்கள் கருத்திற்கு, நல்லது நடக்கும் என எதிர்பார்க்கிறாம்.

reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
குமரேசன் கிருஷ்ணன் • 06-Dec-2015 5:55 pm
எதிர்பார்க்கிறோம், மாற்றங்கள் நிகழட்டும்.

reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
கட்டாரி • 06-Dec-2015 4:52 pm
@ராஜேஷ்...நன்றி தோழரே.... தங்களின் இக் கருத்துக்களே நல்ல ஒரு மாற்றத்திற்கான முதல்படியாகத் தெரிகிறது. இன்னும் சில மாற்றங்களோடு எழுத்து மிளிரும் என நம்பிக்கையும் வருகிறது. நன்றி...!

reply Vote Up Vote Down 1 வாக்குகள்
user photo
ஜின்னா • 07-Dec-2015 4:09 am
@ராஜேஷ்: மிக்க நன்றி தோழரே... தங்களின் எண்ணம் நல்லதொரு விடியலை நமது தோழர் தோழமைகளுக்கு தரட்டும். சில தொல்லைகள் இல்லாமல் இருந்தாலே பல பெண்கள் இங்கு சுதந்திரமாக எழுதுவார்கள்... தங்களின் முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
ஜின்னா • 07-Dec-2015 4:06 am
@குமரேசன்: மிக்க நன்றி நண்பா. தங்களின் ஆதங்கம் புரிகிறது... தளத்தாரும் அவர்களால் முடிந்ததை செய்வார்கள்... இது ஒரு பொது தளம் என்பதால் அவர்களும் இதை பற்றி யோசிப்பார்கள்... தளம் நல்ல நிலைக்கு வந்தால் அவர்களுக்கும் சந்தோசம்தானே...

reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
கருணாநிதி • 06-Dec-2015 2:22 pm
மகாகவி பாரதியாரின் வரிகளைத்தான் மேலே நினைவுக்கு கொண்டு வந்தேன்..ஜின்னா ..!

Reply Vote Up Vote Down 1 வாக்குகள்
user photo
ஜின்னா • 08-Dec-2015 12:17 am
ஐயோ சார்
தங்களின் அன்புக்கு மிக்க நன்றி சார்...

reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
கருணாநிதி • 06-Dec-2015 2:18 pm
எண்ணிய முடிதல் வேண்டும்,
நல்லவே யெண்ணல் வேண்டும்;
திண்ணிய நெஞ்சம் வேண்டும்,
தெளிந்த நல் லறிவு வேண்டும்;
பண்ணிய பாவமெல்லாம்
பரிதி முன் பனியே போல,
நண்ணிய நின்மு னிங்கு
நசித்திட வேண்டும் அன்னாய்!

Reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
ஜின்னா • 07-Dec-2015 4:02 am
மிக்க நன்றி சகோதரரே....
தங்களின் புரிதலுக்கு நன்றிகள் பல...

reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
கயல்விழி மணிவாசன் • 06-Dec-2015 1:22 pm
சபாஷ் இந்த பதிவிற்கு .இதை சொன்னால் எம்மோடு சண்டைக்கு வந்துவிடுவார்கள் என்று தான் நான் அமைதியாகி விட்டேன் .

இவன் கொலை செய்தான் என்று நேரடியாக ஒருவரின் தவறை சுற்றிக்காட்டும் என் பேனா இங்கு வந்ததும் அமைதி ஆகிவிடுகின்றது .காரணம் சிலரின் தகாத வார்த்தைகள் .
பேசவோ பழகவோ theriyaamal அவர்கள் செய்வது சரி என்று நிற்பார்கள் .

என்ன செய்வது .
இது எமக்கான தளம் எம்மை வளர்க்க மிகவும் உதவும் தளம் இங்கு தேவையானவற்றை மட்டும் பதித்தால் அனைவருக்கும் சிறப்பே .

நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன் இது அரட்டை அடிக்கும் இடமல்ல கவி திறனை வளர்க்கும் இடமென்று

அதற்கும் தேவையற்ற கருத்துகள் நிறைந்திருந்தது அதனால் அமைதியாகி விட்டேன்

வளர்ந்து வரும் ஆங்கில nagareegaththaal அழிந்து போகின்ற தமிழுக்கு aangaange இப்படியான தளங்கள் எழுத்தாளர்கள் என்று உயிர்கொடுக்கின்றார்கள்.அதையும் கெடுப்பதால் மனம் வலிப்பது உண்மையே .

அருமையான பதிவு .மீண்டும் என் கைதட்டல்கள் .

Reply Vote Up Vote Down 4 வாக்குகள்
user photo
மினி • 06-Dec-2015 5:43 pm
இந்த கருத்து நீக்கப்பட்டுள்ளது

user photo
குமரேசன் கிருஷ்ணன் • 06-Dec-2015 5:53 pm
@மினி, நண்பர் ஜின்னாவின் எண்ணத்திற்கு மட்டும் பதிலுரைக்கவும்,

reply Vote Up Vote Down -2 வாக்குகள்
user photo
மினி • 06-Dec-2015 6:14 pm
இந்த கருத்து நீக்கப்பட்டுள்ளது

user photo
குமரேசன் கிருஷ்ணன் • 06-Dec-2015 7:41 pm
இந்த கருத்து நீக்கப்பட்டுள்ளது

user photo
கயல்விழி மணிவாசன் • 06-Dec-2015 6:43 pm
நன்றி.
நான் ஒரு journalist என் பேனை மட்டுமே என் ஆயுதம்.சண்டைக்கு வர வேண்டாம் .நான் ஜின்னா அண்ணா வின் எண்ணதிற்கு மட்டும் கருத்திட்டுள்ளேன்

இது வரை என் பெயரில் மட்டுமே செயற்படுகின்றேன்
காரணம் எனக்கு என் தந்தை அழகிய தமிழ்ப் பெயர் வைத்துள்ளார்...

மற்றது பரிசு பெரும் அளவிற்கு நான் பெரிய கவிதாயினி அல்ல
இது தானாக கிடைத்தது .நான் கேட்டு பெறவில்லை

என்னை தாழ்துவதாக நினைத்துக்கொண்டு தங்களை தாழ்த்திக்கொள்ள வேண்டாம்.
இங்கு எனக்கு யாரும் எதிரி அல்ல
நீங்கள் அப்படி நினைத்தால் நான் பொறுப்பும் அல்ல.

ஒருவர் அடுதவரின் மனம் நோகாமல் கருத்து சொல்லும் உரிமை எல்லா நாட்டு சட்டதிலும் உண்டு

மனம் நோகாமல் என்பதை புரிந்தால் நல்லது

reply Vote Up Vote Down 2 வாக்குகள்
user photo
மினி • 06-Dec-2015 6:58 pm
இந்த கருத்து நீக்கப்பட்டுள்ளது

user photo
குமரேசன் கிருஷ்ணன் • 06-Dec-2015 7:04 pm
@ மினி , உங்கள் சுய விபரம் பார்த்தேன், உங்கள் பெயரென்ன, உங்கள் உண்மை முகம் பதிந்து பின் பேசவும்,

reply Vote Up Vote Down -1 வாக்குகள்
user photo
மினி • 06-Dec-2015 7:07 pm
மினி தான்..என் பெயர்..சுயவிவரம் வேண்டுமானால் தாளரமாய் அளித்து விடலாம்..

reply Vote Up Vote Down 2 வாக்குகள்
user photo
இரா-சந்தோஷ் குமார் • 06-Dec-2015 7:11 pm
மினி. கயல்விழிக்கும் உங்களுக்கும் என்ன விரோதமாக இருந்தாலும். இப்படி பொதுவில் தரம் தாழ்த்தி கருத்திடுவது சரியில்லை. தோழர் ஜின்னா அளித்த கருத்திற்கு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். இல்லை எனில் கருத்திடாமல் செல்லுங்கள். அது உங்கள் உரிமை. அதைவிடுத்து ஒருவரின் பதிவுக்கு கருத்திட வருபவரை தனிப்பட்ட காழ்புணர்ச்சியில் விமர்சனம் செய்வது எவ்விதத்தில் சரியானது ?. சிந்திக்கவும் தோழமையே.

reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
ஹரிணி • 06-Dec-2015 9:55 pm
மினி அவர்களே (ஆண்ணா பெண்ணா என்பது கூட சந்தேகம்) உங்கள் கருத்தில் entha நிஜாயமும் இருப்பதாக தெரியவில்லை. முதல்ல எதைப்பற்றி பேசுகின்றோம் என்பதை புரிந்து கொண்டு தெரிந்து கொண்டு உங்கள் karuththukkalai முன் வையுங்கள். அதை விடுத்து தனிப்பட்ட ஒருவரை சாடுவதோ அல்லது இயலாமையின் வெளிப்பாடாய் காழ்ப்புணர்ச்சியில் பதிவிடுவதையும் பதிலிடுவதையும் தவிருங்கள். இங்கு யாரும் நாங்கள் கவிஞர்கள் என்று சொல்லிக்கொண்டு வளரும் கவிஞர்கள் தான். இத்தனையாண்டுகளாக உங்களுக்கு என்று ஒரு முகவரி இல்லாத நீங்கள் தளத்தில் ஒரு முகவரியுடன் இருக்கும் யாரையும் குறை கூற அருகதை இல்லை. அடுத்தவர் படைப்பை சிறு பிள்ளையும் விமர்சனம் செய்யலாம். ஆனாலும் தகுதியுள்ளவரின் விமர்சனமே தலைதூக்கும். தங்களது இயாலாத்தன்மையை - முதுகெலும்பு இல்லாத கோழைத்தனத்தை வெளிக்காட்டியமைக்கு நன்றிகள். ஒருவரை தனிப்பட்ட ரீதியில் விமர்சனம் செய்வது என்பது அவரின் வெற்றியை குறிக்கின்றது.

தளத்தை தப்பாக குறை கூற முதல் உங்களுக்கு என்று ஒரு முத்திரையை காட்டுங்கள்.

ஒரு படைப்பாளியை விமர்சிக்க ஒரு வெத்துவேட்டுவாக இல்லாமல் ஒரு படைப்பளியாக இருக்க வேண்டும்.

reply Vote Up Vote Down -1 வாக்குகள்
user photo
செண்பக வள்ளி • 06-Dec-2015 10:45 pm
இந்த கருத்து நீக்கப்பட்டுள்ளது

user photo
ஹரிணி • 07-Dec-2015 7:44 am
வணக்கம்.
தளத்தில் நானும் ஒரு வாசகி தான் உங்களை போல. கவிதை படைக்க தெரியாது. பார்த்து படித்து மகிழ்ந்திட தளத்தில் இணைந்தவள் நான். எல்லோருமே எனக்கு உறவு தான். மினி உட்பட. எல்லோரது படைப்புக்களையும் படிப்பேன். இன்று தளம் முன்பு போல் இல்லை. எனக்கு பிடித்த பலர் தளத்தில் இல்லை. ஒரு வாசகியாக தான் நேற்று கருத்திட்டேன். நன்றாக மறுபடியும் படித்து பாருங்கள். யாருக்கும் சார்பாக கருத்திடவில்லை. சாமானிய வாசகியாக மனதில் பட்டத்தை பொதுப்பட பதிந்தேன். யாருக்கும் சார்பும் இல்லை. எதிர்ப்பும் இல்லை. முதல்ல பொதுவிடத்தில் கருத்திடும் போது யோசிக்க வேண்டும். அதனை முதலில் கற்றுக்கொள்ள வேண்டும்.

reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
செண்பக வள்ளி • 07-Dec-2015 7:59 am
இந்த கருத்து நீக்கப்பட்டுள்ளது

user photo
குமரேசன் கிருஷ்ணன் • 06-Dec-2015 7:09 pm
தங்கை கயல் இம்மாதிரியானவர்களிடம் பேசி உன் நேரத்தை வீண்டிக்காதே, தனக்கு தானே பேசி அதுபாட்டுக்கு திரியட்டும்.

reply Vote Up Vote Down 1 வாக்குகள்
user photo
கயல்விழி மணிவாசன் • 06-Dec-2015 7:17 pm
நன்றி அண்ணா.
இனி நான் கருத்திட மாட்டேன்.

reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
ஜின்னா • 07-Dec-2015 4:01 am
தயவு செய்து இங்கு கொச்சையாக பேசி சண்டையை வளர்த்துக் கொள்ளாதீர்கள்... இப்படி பேசுவதில்தான் பிரச்சனையே வருகிறது...
அதற்காகத்தான் இந்த எண்ணமும் போட்டேன்... ஆனால் அதிலும் அதே பிரச்சனையா? எல்லோரிடத்திலும் அன்பும் சகோதரத் துவமும் சகிப்பு தன்மையையும் வளரட்டும்... வாழ்த்துக்கள் அனைவருக்கும். தமிழனாய் இருப்பதில் பெருமை கொள்வோம்.

reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
Rajesh Kumar • 06-Dec-2015 12:27 pm
@மனோ ரெட் - எழுத்து நிர்வாகம் ஏதோ உங்கள் அடிமை போல பேசுவதை நிறுத்தவும். பேசாமல் இருப்பதும் இல்லாமல் இருப்பதும் உங்கள் விருப்பம். உங்களுக்குள் ஏற்படும் விரோதங்களை தீர்ப்பது எங்கள் வேலை அல்ல. தேவை பட்டாள் உங்கள் விரோதிகளை சட்டத்தின் முன் கொண்டு செல்லுங்கள்.

Reply Vote Up Vote Down 4 வாக்குகள்
user photo
மனோ ரெட் • 06-Dec-2015 1:03 pm
சரிங்க ராஜேஷ் ...இப்படி பேசும் எழுத்துதளம் நாங்கள் பதியும் எண்ணங்களை பதிந்தவரின் அனுமதியின்றி நீக்குவது ஏனோ? அரசாங்கத்தின் பக்கங்களில் நாங்கள் எழுதவில்லை ..
விரோதங்களை தீர்க்க சொல்லவில்ல்லை.தளத்தை இன்னும் வலுவாக்க சொல்கிறோம்....

எவனோ ஒருவன் தவறான பெயரில் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவான்...இதற்கு தளம் நிர்வாகம் அமைதி காக்குமா..?

தேவையில்லாத எண்ணங்களை நீக்க அதிகாரம் உங்களுக்கு இருக்கும்போது தேவையில்லாத உறுப்பினர்களை நீக்குவதில் என்ன தயக்கம்...இதற்காக அரசாங்கத்தை தொல்லை செய்ய எங்களுக்கு மனமில்லை....

reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
அருண்ராஜ் • 06-Dec-2015 1:18 pm
@மனோ ரெட்

தேவை இல்லாத உறுப்பினர்கள் என்று எதை வைத்து முடிவு செய்வது என்று தீர்கமான விதிகள் வேண்டும் .




reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
மனோ ரெட் • 06-Dec-2015 1:41 pm
அவர்களுக்கு தெரியாத விதியா..?? எது எதுவோ செய்யும் போது முறையான உறுப்பினர் சேர்க்கவும் முடியும் அருண்

reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
Rajesh Kumar • 06-Dec-2015 2:15 pm
இது ஒன்றும் பள்ளிக்கூடம் அல்ல, இங்கே ஆவணங்கள் எல்லாம் செரிபர்க்க முடியாது. தேவைப்பட்டால் சட்டத்தின் முன் சமர்பிக்க தேவையான எல்லா விடயங்களும் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.

reply Vote Up Vote Down 3 வாக்குகள்
user photo
அருண்ராஜ் • 06-Dec-2015 1:25 pm
@ராஜேஷ்
நீங்கள் சொல்லும் கூற்றுப்படி ஒரு நபர் காழ்புணர்ச்சியோடு ஆபாச வார்த்தைகளை எழுத்து தலத்தில் பதிந்தால் நாம் திருப்பி பதியலாம் ..

நாங்களே ஒரு முடிவுக்கு வந்தவுடன் களையலாம்

அதுவரை தளம் எந்த நடவடிக்கையும் எடுக்காது அல்லவா ??!!!

இட்ஸ் ஜஸ்ட் clarification !!

நாளை எவராவது தவறாக பேசினால் நானும் தவறாக பேசி சமாதானம் பேசலாம் அல்லவா அதற்காக

reply Vote Up Vote Down 1 வாக்குகள்
user photo
மனோ ரெட் • 06-Dec-2015 1:40 pm
ஆமா அருண்...நீங்கள் சொல்வது போல செய்வதைத்தான் விரும்புகிறார்கள் போல....பதில் வருமா பார்க்கலாம் அருண்

reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
Rajesh Kumar • 06-Dec-2015 1:51 pm
@arunvaali - இதுவரை, நிறைய சமயங்களில், பல முறை விதிமுறை மீறியவர்களே நீக்கப்பட்டுள்ளனர்.

reply Vote Up Vote Down 3 வாக்குகள்
user photo
Rajesh Kumar • 06-Dec-2015 2:08 pm
அது உங்கள் விருப்பம்.. வார்த்தை விளையாட்டு உங்கள் விருப்பம் என்றல் செய்யங்கள்.

இதுவரை, எத்துனை முறை கொச்சையான வார்த்தை பேசினார்கள் என்று நீவர் கொடி அசைத்து எந்த நடவடிக்கையும் எடுக்கலாம் இருந்திருகிறார்கள். அப்படி கொடி அசைத்து நடவடிக்கை எடுக்காத அந்த பதிவுகளையும் இங்கே பகிருங்கள்.

reply Vote Up Vote Down 2 வாக்குகள்
user photo
ஜின்னா • 07-Dec-2015 3:59 am
@ராஜேஷ் : தமிழ் மொழிக்காக நீங்கள் செய்யும் இந்த தள சேவை பாராட்டுக் குரியது. அதை இன்னும் நெறிமுறை படுத்தினால் ஒரு நல்ல சமூகத்தை உருவாக்க முடியுமே என்ற நோக்கத்தில் பதிய பட்டவைதான் இந்த எண்ணம். அதை வேறு மாதிரி திசை திருப்பி யோசிக்க வேண்டாம். அதற்காக நான் வருந்துகிறேன். இன்னும் சிறப்பாக தளம் செயல் பட எனது வாழ்த்துக்கள்.

reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
மனோ ரெட் • 06-Dec-2015 12:11 pm
தமிழ் மொழி மீதான உணர்வுப்பூர்வப் பதிவு..யாராலும் இதை மறுத்துப் பேசவோ ஒதுக்கிப் பேசவோ முடியாது. தமிழைக் கொச்சையாக்கி பேச தமிழனால் மட்டுமே முடியும்..அவன் கேவலமான எண்ணங்கள் அவனை கேவலமாக எழுத வைக்கின்றன.. மனதளவில் பாதிக்கப்பட்ட அவர்களின் எழுத்தும் பாதிக்கப்பட்டே இருக்கிறது. தன் முகத்தைக் காட்டாமல் முகமூடி அணிந்து எல்லோரையும் தரக்குறைவாக பேசுவது அம்மணமாக திரிவது போல இருக்கிறது .. தைரியமானவன் முதுகுப்புறம் பேசாமல் முகத்தைக் காட்டி பேசுவது அழகு.. எழுத்து தளம் ஆண்டுவிழா கொண்டாடுவது எல்லாம் சந்தோசமே...உங்களின் அதிகாரம் சர்வாதிகாரம் ஆகிவிடக்கூடாது.எல்லோருக்கும் மதிப்பு கொடுங்கள் ..தவறுகளை உங்கள் பார்வைக்கு கொண்டுவரும் போது நடவடிக்கை எடுங்கள் ...உங்கள் ஊர்க்காரன் என்றால் அவனுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்காதீர்கள்.. எல்லா அரசியலும் அப்பட்டமாகவே தெரிகிறது ... பேசாமல் இருக்கமுடியாது.. நடவடிக்கை எடுக்க முடியும் முடியாது என்பதை சொல்லிவிடுங்கள்.. இல்லையெனில் ஜின்னா சொல்லியது போல அடையாளத்தை பெற்று தளத்திற்குள் அனுமதியுங்கள்..

Reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
ஜின்னா • 07-Dec-2015 3:55 am
மிக்க நன்றி தம்பி...
உங்களது ஆதங்கம் புரிகிறது இருப்பினும் ஒரு பொது தளத்தில் இப்படி பொத்திக் கொண்டு என்ற வார்த்தைகளை எல்லாம் பயன் படுத்தக் கூடாது. ஒரு நல்ல மாற்றம் வர வேண்டிதான் இதை பதிவு செய்தேன் அதையே ஒரு பெரிய பிரச்சனையாக ஆகி விட கூடாது...
நாம் அதற்காகவும் வர வில்லை.

தங்களின் புரிதலுக்கு நன்றிகள் பல...

reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
பாத்திமா மலர் • 06-Dec-2015 11:41 am
எழுத்துகளில் அனல் வீசுகிறது. உங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி ஜின்னா . சாது மிரண்டால் காடு கொள்ளாது மீண்டும் நன்றி வாழ்த்துக்கள் ஜின்னா

Reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
ஜின்னா • 07-Dec-2015 3:53 am
மிக்க நன்றி தோழமையே...
இது மிரண்டதனால் வந்ததல்ல ஒரு மாற்றத்துக்காக வந்தது...
தங்களின் புரிதலுக்கு நன்றிகள் பல...

reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
அருண்ராஜ் • 06-Dec-2015 11:32 am
தமிழ் மொழியை யாரும் வளர்க வேண்டாம் .

அது ஏற்கனவே வளர்ந்து நிற்கிறது .

பழைய பழைய ஆட்கள் வேறு வேறு பெயரோடு அதுவும் எப்படியான பெயர்கள் என்றால்

குரங்கு குப்பன்

கருந்தேள்

பாம்பு ரவி

அனிமல்ஸ் பெயரை அடைமொழியோடு வைத்துகொண்டு அவர்கள் செய்யும் அலைபரை என்னவென்று சொல்ல ..

கேட்டால் இது ஜனநாயகம் என்பார்கள் .


இருக்கட்டும் கிருகட்டும் .

சேற்றில் தான் தாமரை மலரும்

சேறு தேவை .

எழுத்து தளம் ஜின்னா அவர்கலின் ஆதங்கத்தை உள்வாங்கி கொள்ள வேண்டும்
Reply Vote Up Vote Down 1 வாக்குகள்
user photo
ஜின்னா • 07-Dec-2015 3:52 am
மிக்க நன்றி நண்பரே...
தங்களின் புரிதலுக்கு நன்றிகள் பல...

எழுதியவர் : பதிவு : ஜின்னா---நாள் : 6-Dec-15, (3-Jun-19, 5:49 am)
பார்வை : 62

மேலே