திருவலிதாயம்

திருவலிதாயம் திருவல்லீசுவரர் கோயில்

தேவாரம் பாடல் பெற்றது.
திருவலிதாயம் (பாடி)
மாவட்டம்: சென்னை
மாநிலம்: தமிழ்நாடு
மூலவர்: திருவல்லீஸ்வரர், திருவலிதமுடைய நாயனார்
தாயார்: ஜெகதாம்பிகை
பரத்வாஜ் தீர்த்தம்
தல விருட்சம்: பாதிரி, கொன்றை

திருவலிதாயம் - பாடி வல்லீஸ்வரசுவாமி கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.

அமைவிடம்
சென்னை மாவட்டத்தில் ஆவடி செல்லும் சாலையில் பாடி லூகாஸ் டிவிஸ் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு எதிரே உள்ள சாலை வழியாகச் சென்று இக்கோவிலை அடையலாம்.

சிறப்பு
இராமர், ஆஞ்சனேயர், சூரியன், சந்திரன் முதலானோர் இறைவனை வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை. இத்தலத்தின் மூலவர் திருவல்லீஸ்வரர் என்றும் திருவலிதமுடைய நாயனார் என்றும் அழைக்கப் பெறுகிறார். தாயார் ஜெகதாம்பிகை. பரத்வாஜ் தீர்த்தம் இத்தல தீர்த்தமாகவும், பாதிரி மற்றும் கொன்றை மரம் தலமரமாகவும் அறியப் பெறுகிறது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Jun-19, 8:36 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 113

மேலே