நல்லெண்ணம் வளர் கட்டுரை

ஆண் பிள்ளைகள் உழைத்து வாழவேண்டும்
வெட்கமற்ற செயல் வரதட்சணை ..
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் ஆண் பிள்ளைகளை கஷ்டத்தை, உழைப்பின் வலிமையை , பெருமையை பிஞ்சு மனதில் உறைக்கும்படி சொல்லி வளருங்கள். உங்கள் சொத்துக்களை அள்ளி அள்ளி கொடுங்கள் வேண்டாமென்று சொல்வதற்கில்லை . அதனால் அவர்களை சோம்பேறியாகவும் . திமிர் பிடித்தவனாகவும் அலைய விடாதீர்கள்
. பெண் பிள்ளைகளின் பெற்றோர் மனம் கோணாமல் தங்கள் குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய சீர் எதுவோ அவர்கள் கொடுப்பதை மனமுவந்து ஏற்றுக் கொண்டு, உங்கள் உழைப்பில் குடும்பத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பை ஆண் பிள்ளைகளே/ நீங்கள் உணர்ந்து தன்மானம் மிக்கவர்களாக வாழ்ந்திடப் பழகிக் கொள்ளுங்கள் ,
அப்போதுதான் குடும்பம் என்றால் என்ன/ அதன் பொறுப்பு என்ன என்பது புரியும். அப்போதுதான் உங்களை செல்லப் பிள்ளைகளாய் வளர்த்த உங்கள் பெற்றோரும் உங்களை பார்த்து பெருமிதம் அடைவார்கள் . பெற்றோர் செய்யும் ஒவ்வொரு பகட்டு செயலும் பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதிக்கிறது. அவர்களின் குடும்ப வாழ்க்கையை கேள்விக் குறியாய் ஆக்குகிறது
. பெற்றோரே உங்கள் பாசம் அளவோடும், அளவற்ற நேசம் அடி மனதிலும் இருக்கட்டும் . சகல சொத்தும் உங்களிடம் இருந்து பிள்ளைகளுக்கு கைமாறிய பின் நீங்கள் என்ன ஆவீர்கள் சற்று சிந்தியுங்கள் .
உங்கள் இருப்பிடம் கையேந்தும் முதியோர் இல்லமே , உங்கள் ஆயுள் வரை உங்களிடம் பிள்ளைகள் தேடி ஓடி தேடி வந்து உங்களை மகிழ்ச்சியாய் வைத்திருக்க வேண்டும் . இதற்கு ஒரே வழி திருமணம் முடிந்த பின் ஒவ்வொரு ஆண்பிள்ளைகளும் தங்கள் மனைவிகளுடன் தனிக் குடித்தனம் செல்வது மட்டுமே,. இதனால் அவர்கள் குடும்பமும், பெற்றோர் குடும்பமும் சிறப்புடன் வாழ முடியும்
முக்கியமாக ஆண் பிள்ளைகளே/ தன்மானம் மிக்க உயாரந்த குணம்
உங்களுடன் என்றும் நிலைக்கட்டும் ,
பணத்தை தேடிட முடியும் உன்னால் ஆனால் பாசத்தை தேடிட இயலாது ,எதிர்காலத்தில் நம்பிக்கை எனும் நல்லெண்ண தூண்களாக நாட்டையும் வீட்டையும் காப்பது உங்கள் கடமை.
இருந்தாலும் இறந்தாலும் பெயர் சொல்ல வேண்டும், இவன் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் .

எழுதியவர் : பாத்திமாமலர் (3-Jun-19, 12:32 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 1197

மேலே