தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது

தோப்பில் முகமது மீரான் என்பவர் (செப்டம்பர் 26, 1944 - மே 10, 2019)[1] தமிழ், மலையாள எழுத்தாளர் ஆவார். இவர் 1997 ஆம் ஆண்டில் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றார்.[2]



தோப்பில் முகமது மீரான்
பிறப்பு செப்டம்பர் 26, 1944
நாகர்கோவில், கன்னியாகுமரி, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு 10 மே 2019 (அகவை 74)
திருநெல்வேலி, தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம் நாகர்கோவில், கன்னியாகுமரி, தமிழ்நாடு, இந்தியா
செயல்பட்ட
ஆண்டுகள் 2010
வாழ்க்கைத்
துணை ஜலீலா மீரான்
பிள்ளைகள் சமீம் அகமது
மிர்சாத் அகமது
விருதுகள் சாகித்திய அகாதமி விருது

வாழ்க்கைக் குறிப்பு

முகமது மீரான் கன்னியாகுமரி மாவட்டத்தில், தேங்காப்பட்டினம் என்ற ஊரில் பிறந்தார். இவரது மனைவியின் பெயர் ஜலீலா மீரான். இவர் 5 புதினங்களையும் 6 சிறுகதைத் தொகுப்புகளையும் சில மொழிபெயர்ப்புகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவரது புதினம் சாய்வு நாற்காலி 1997 இல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது.

விருதுகள்

சாகித்திய அகாதமி விருது - சாய்வு நாற்காலி (1997)
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது
இலக்கியச் சிந்தனை விருது
லில்லி தேவசிகாமணி விருது
தமிழக அரசு விருது
அமுதன் அடிகள் இலக்கிய விருது
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது
எழுதிய நூல்கள்
(முழுமையானதல்ல)

புதினங்கள்

ஒரு கடலோரக் கிராமத்தின் கதை (1988)
துறைமுகம் (1991)
கூனன் தோப்பு 1993)
சாய்வு நாற்காலி (1997)
அஞ்சுவண்ணன் தெரு
குடியேற்றம்(2017)
சிறுகதைத் தொகுப்புகள்
அன்புக்கு முதுமை இல்லை
தங்கரசு
அனந்தசயனம் காலனி
ஒரு குட்டித் தீவின் வரிப்படம்
தோப்பில் முகமது மீரான் கதைகள்
ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்
மொழிபெயர்ப்புகள்
தெய்வத்தின் கண்ணே (என்பி. முகமது)
வைக்கம் முகமது பஷீர் வாழ்க்கை வரலாறு (ஆய்வுக் கட்டுரை) ( எம். என். கரச்சேரி)
மேற்கோள்கள்

↑ "எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் காலமானார்". புதியதலைமுறை (மே 10, 2019)
↑ "Living Legend". தி இந்து. 19 பிப்பிரவரி 2005--------- பார்த்த நாள்: 3 மே 2010.

வெளி இணைப்புகள்

தோப்பில் முகமது மீரானின் இணையத்தளம்
அலை ஓசை (புதினம்)
கல்கியின் அலை ஓசை ஒரு சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல் ஆகும். இது நான்கு பாகங்களை கொண்ட நாவல் ஆகும். அவை பூகம்பம், புயல், எரிமலை மற்றும் பிரளயம் ஆகும்.

ஆ. மாதவன்

ஆ. மாதவன் (A. Madhavan, பிறப்பு:1934) கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்து வசிக்கும் தமிழ் எழுத்தாளர் ஆவார். 1955 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து சிறுகதைகள், நாவல்கள் எழுதிவரும் முக்கிய படைப்பாளி. இவரது பல சிறுகதைகள் நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. திராவிட எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு எழுத்தாளராக ஆனவர். கிருஷ்ண பருந்து உட்பட 3 புதினங்களை எழுதியுள்ளார். செல்வி இசுடோர்சு என்ற கடையை நடத்தி வரும் மாதவன் திருவனந்தபுரத்திலுள்ள சாலைத்தெருவைப் பின்னணியாகக் கொண்டு பல சிறுகதைகளை எழுதியுள்ளார்.

இவருக்கு 2015-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது ‘இலக்கிய சுவடுகள்’ என்ற திறனாய்வு நூலுக்காக வழங்கப்பட்டது.

ஆதவன் (எழுத்தாளர்)

கே. எஸ். சுந்தரம் என்ற இயற்பெயர் கொண்ட ஆதவன் (1942 - சூலை 19, 1987) தமிழக எழுத்தாளர். அறுபதுகளில் எழுதத் துவங்கி, தமிழ்ச் சிறுகதை உலகில் பல குறிப்பிடத் தக்க சாதனைகளை நிகழ்த்தியவர்.

இரா. தண்டாயுதம்

இரா. தண்டாயுதம் ( 1939 - ? ) ஒரு தமிழ் எழுத்தாளர், விமர்சகர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். 1975ன் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.

ஈரோடு தமிழன்பன்

ஈரோடு தமிழன்பன் ஒரு தமிழகக் கவிஞர் ஆவார். ஆசிரியர், மரபுக் கவிஞர், கவியரங்கக் கவிஞர், புதுக்கவிதைக் கவிஞர், சிறுகதை ஆசிரியர், புதின ஆசிரியர், நாடக ஆசிரியர், சிறார் இலக்கியப் படைப்பாளி, வாழ்க்கை வரலாற்றாசிரியர், திறனாய்வாளர், கட்டுரையாளர், ஓவியர், சொற்பொழிவாளர், திரைப்பட இயக்குநர், திரைப்பட பாடலாசிரியர், என பன்முகப்பட்ட ஆளுமைகளைக் கொண்டிருப்பவர்.

சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் செய்தி வாசிப்பாளாராக பணியாற்றியவர். தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்றத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு அரசின் அறிவியல் தமிழ் மன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார்.

எம். வி. வெங்கட்ராம்

எம்.வி.வெங்கட்ராம் (மே 18, 1920 - ஜனவரி 14, 2000) தமிழ் சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்கு பங்களிப்பு நல்கிய தமிழக எழுத்தாளர். 16வது வயதில் முதன் முதலில் இவர் எழுதிய "சிட்டுக்குருவி" என்ற சிறுகதை மணிக்கொடியில் வெளியானது. 1993 ஆம் ஆண்டில் இவர் எழுதிய "காதுகள்" என்ற புதினத்திற்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. "விக்ரஹவிநாசன்' என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதியுள்ளார்.

க. த. திருநாவுக்கரசு

க. த. திருநாவுக்கரசு (1931- 1989) தமிழ்ப் பேராசிரியர், தமிழ் எழுத்தாளர், அறிஞர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர். இவர் வரலாறு, கல்வெட்டு, மொழியியல், சமூகவியல், மானிடவியல், தத்துவம் போன்ற பல்வேறு துறைகளில் புலமை பெற்றவர். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்தவர். முனைவர் மு. வரதராசனின் படைப்பிலக்கியங்களை ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர். இவருக்கு சாகித்ய அகாடமி நிறுவனம் 'திருக்குறள் மணி' என்னும் பட்டம் வழங்கிப் பாராட்டியது. பின்னர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணி புரிந்தார். 1974ல் இவர் எழுதிய திருக்குறள் நீதி இலக்கியம் என்ற இலக்கிய விமர்சன புத்தகத்திற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.

கோவி. மணிசேகரன்

கோவி. மணிசேகரன் ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார். 1992 இல் அவர் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றார்.

சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்
தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்களின் பட்டியல்:

ஆண்டு - படைப்பு (தன்மை) - படைப்பின் எழுத்தாளர்

1955 - தமிழ் இன்பம் (கட்டுரைத் தொகுப்பு) - ரா. பி. சேதுப்பிள்ளை

1956 - அலை ஓசை (நாவல்) - கல்கி கிருஷ்ணமூர்த்தி

1957 - (விருது வழங்கப்பட வில்லை)

1958 - சக்கரவர்த்தித் திருமகன் (இராமாயணத்தின் உரைநடை) - சி. ராஜகோபாலச்சாரி

1959 - (விருது வழங்கப்பட வில்லை)

1960 - (விருது வழங்கப்பட வில்லை)

1961 - அகல் விளக்கு (நாவல்) - மு.வரதராசனார்

1962 - அக்கரைச்சீமை (பயண நூல்) - சோமு (மீ. ப. சோமசுந்தரம்)

1963 - வேங்கையின் மைந்தன் - அகிலன் (பி. வி. அகிலாண்டம்)

1964 - (விருது வழங்கப்பட வில்லை)

1965 - ஸ்ரீ ராமானுஜர் (வாழ்க்கை வரலாறு) - பி. ஸ்ரீ ஆச்சார்யா

1966 - வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (வாழ்க்கை வரலாறு) - ம. பொ. சிவஞானம்

1967 - வீரர் உலகம் (இலக்கிய விமர்சனம்) - கி. வா. ஜகன்னாதன்

1968 - வெள்ளைப் பறவை (கவிதை) - அ. சீனிவாச ராகவன்

1969 - பிசிராந்தையார் (நாடகம்) - பாரதிதாசன்

1970 - அன்பளிப்பு (சிறுகதைகள்) - கு. அழகிரிசாமி

1971 - சமுதாய வீதி (நாவல்) - நா. பார்த்தசாரதி

1972 - சில நேரங்களில் சில மனிதர்கள் (நாவல்) - ஜெயகாந்தன்

1973 - வேருக்கு நீர் (நாவல்) - ராஜம் கிருஷ்ணன்

1974 - திருக்குறள் நீதி இலக்கியம் (இலக்கிய விமர்சனம்) - கே. டி. திருநாவுக்கரசு

1975 - தற்கால தமிழ் இலக்கியம் (இலக்கிய விமர்சனம்) - ஆர். தண்டாயுதம்

1976 - (விருது வழங்கப்பட வில்லை)

1977 - குருதிப்புனல் (நாவல்) - இந்திரா பார்த்தசாரதி

1978 - புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (விமர்சனம்) - வல்லிக்கண்ணன்

1979 - சக்தி வைத்தியம் (சிறுகதைத் தொகுப்பு) - தி. ஜானகிராமன்

1980 - சேரமான் காதலி (நாவல்) - கண்ணதாசன்

1981 - புதிய உரைநடை (விமர்சனம்) - மா. ராமலிங்கம்

1982 - மணிக்கொடி காலம் (இலக்கிய வரலாறு) - பி. எஸ். ராமையா

1983 - பாரதி : காலமும் கருத்தும் (இலக்கிய விமர்சனம்) - தொ. மு. சிதம்பர ரகுநாதன்

1984 - ஒரு காவிரியைப் போல - லட்சுமி திரிபுரசுந்தரி

1985 - கம்பன் : புதிய பார்வை (இலக்கிய விமர்சனம்) - அ. ச. ஞானசம்பந்தன்

1986 - இலக்கியத்துகாக ஒரு இயக்கம் (இலக்கிய விமர்சனம்) - க. நா. சுப்பிரமணியம்

1987 - முதலில் இரவு வரும் (சிறுகதைத் தொகுப்பு) - ஆதவன்

1988 - வாழும் வள்ளுவம் (இலக்கிய விமர்சனம்) - வா. செ. குழந்தைசாமி

1989 - சிந்தாநதி (சுயசரிதக் கட்டுரைகள்) - லா. ச. ராமாமிர்தம்

1990 - வேரில் பழுத்த பலா (நாவல்) - சு. சமுத்திரம்

1991 - கோபல்ல கிராமத்து மக்கள் (நாவல்) - கி. ராஜநாராயணன்

1992 - குற்றாலக் குறிஞ்சி (வரலாற்று நாவல்) - கோவி. மணிசேகரன்

1993 - காதுகள் (நாவல்) - எம். வி. வெங்கட்ராம்

1994 - புதிய தரிசனங்கள் (நாவல்) - பொன்னீலன் (கண்டேஸ்வர பக்தவல்சலன்)

1995 - வானம் வசப்படும் (நாவல்) - பிரபஞ்சன்

1996- அப்பாவின் சிநேகிதர் (சிறுகதைத் தொகுப்பு) - அசோகமித்ரன்

1997 - சாய்வு நாற்காலி (நாவல்) - தோப்பில் முகமது மீரான்

1998 - விசாரணைக் கமிஷன் (நாவல்) - சா. கந்தசாமி

1999 - ஆலாபனை (கவிதைகள்) - அப்துல் ரகுமான்

2000 - விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள் (விமர்சனம்) - தி. க. சிவசங்கரன்

2001 - சுதந்திர தாகம் (நாவல்) - சி. சு. செல்லப்பா

2002 - ஒரு கிராமத்து நதி (கவிதைகள்) - சிற்பி பாலசுப்ரமணியம்

2003 - கள்ளிக்காட்டு இதிகாசம் (நாவல்) - வைரமுத்து

2004 - வணக்கம் வள்ளுவ (கவிதைகள்) - ஈரோடு தமிழன்பன்

2005 - கல்மரம் (நாவல்) - ஜி. திலகவதி

2006 - ஆகாயத்துக்கு அடுத்த வீடு (கவிதைகள்) - மு.மேத்தா

2007 - இலையுதிர் காலம் (நாவல்) - நீல. பத்மநாபன்

2008 - மின்சாரப்பூ (சிறுகதைகள்) - மேலாண்மை பொன்னுசாமி

2009 - கையொப்பம் (கவிதைகள் (மொழிபெயர்ப்பு) - புவியரசு

2010 - சூடிய பூ சூடற்க (சிறுகதைகள்) - நாஞ்சில் நாடன்

2011 - காவல் கோட்டம் (புதினம்) - சு. வெங்கடேசன்

2012 - தோல் (புதினம்) - டேனியல் செல்வராஜ்

2013 - கொற்கை ((புதினம்) - ஜோ டி குரூஸ்

2014 - அஞ்ஞாடி - பூமணி

2015 - இலக்கியச் சுவடுகள் (திறனாய்வு நூல்) - ஆ. மாதவன்

2016 - ஒரு சிறு இசை (சிறுகதைகள்) - வண்ணதாசன்

2017 - காந்தள் நாட்கள் (கவிதைகள்) - இன்குலாப்

2018 - சஞ்சாரம்(புதினம்) - எஸ். ராமகிருஷ்ணன்

சு. சமுத்திரம்
சு. சமுத்திரம் (1941 – ஏப்ரல் 1, 2003) ஒரு தமிழ் எழுத்தாளர். வேரில் பழுத்த பலா என்ற புதினத்துக்காக சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.

ஜோ டி குரூஸ்
ஜோ டி குரூஸ் (ஜோ டி க்ரூஸ்) ஒரு தமிழக எழுத்தாளர். சென்னை இராயவரம் பகுதியைச் சேர்ந்த இவர் பொருளாதாரத்தில் முதுகலை, முனைவர் பட்டங்களைப் பெற்றிருக்கிறார். கப்பல் போக்குவரத்துத் துறையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். “புலம்பல்கள்” எனும் கவிதை நூல் 2003ல் வெளியாகியுள்ளது.

பிரபஞ்சன்
பிரபஞ்சன் (ஏப்ரல் 27, 1945 - திசம்பர் 21, 2018) ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் விமர்சகர். இவர் 1995 ஆம் ஆண்டு, தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.

பூமணி
பூமணி (பிறப்பு - 1947, இயற்பெயர் - பூ. மாணிக்கவாசகம்.) சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார்.இவர் எழுதிய 'அஞ்ஞாடி' என்ற நாவலுக்கு 2014 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது

பொன்னீலன்
பொன்னீலன் தமிழ் முற்போக்கு இலக்கியவாதிகளில் குறிப்பிடத்தக்க படைப்பாளி. குமரி மாவட்டம், நாகர்கோயில் அருகே மணிகட்டிபொட்டல் என்ற ஊரில் 1940ல் பிறந்தவர். இவரது அன்னை அழகிய நாயகி அம்மாளும் குறிப்பிடத்தக்க படைப்பாளி. இவரது இயற்பெயர் ஸ்ரீகண்டேஸ்வர பக்தவத்ஸலன். சபாபதி என்று இன்னொரு பெயரும் உண்டு. பொன்னீலன் இளங்கலை படிப்பு முடித்து ஆசிரியர் பயிற்சிபெற்று உயர்நிலைப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். கல்வி அதிகாரியாகப் பணி நிறைவு பெற்றார்.

மீ. ப. சோமு
மீ. ப. சோமசுந்தரம் (ஜூன் 17, 1921 - ஜனவரி 15, 1999 ) ஒரு தமிழ் எழுத்தாளர். மீ. ப. சோமு என்பது அவரது புனைப்பெயர். அவர் பத்திரிக்கை, கவிதை, புதினம், சிறுகதை, கட்டுரை, இசை போன்ற பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர். 1962ல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.

மே 10
மே 10 (May 10) கிரிகோரியன் ஆண்டின் 130 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 131 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 235 நாட்கள் உள்ளன.

வா. செ. குழந்தைசாமி

வா. செ. குழந்தைசாமி (சூலை 14, 1929 - திசம்பர் 10, 2016) இந்திய பொறியியல் (நீரியல்துறை) அறிஞரும், கல்வியாளரும் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் நிறுவனத் தலைவராகப் பணியாற்றியவர்.

வைரமுத்து

வைரமுத்து (Vairamuthu, சூலை 13, 1953), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் மற்றும் கவிஞர் ஆவார். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார். நிழல்கள் (1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் சனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார். முன்பு இளையராஜாவுடனும், பின்னர் ஏ. ஆர். ரகுமானுடனும் இவர் இணைந்து வழங்கியப் பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன.

சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்
1955 - 1975
ரா. பி. சேதுப்பிள்ளை (1955) · கல்கி கிருஷ்ணமூர்த்தி (1956) · சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (1958) · மு. வரதராசனார் (1961) · மீ. ப. சோமு (1962) · அகிலன் (1963) · பி. ஸ்ரீ ஆச்சார்யா (1965) · ம. பொ. சிவஞானம் (1966) · கி. வா. ஜகந்நாதன் (1967) · அ. சீனிவாச ராகவன் (1968) · பாரதிதாசன் (1969) · கு. அழகிரிசாமி (1970) · நா. பார்த்தசாரதி (1971) · ஜெயகாந்தன் (1972) · ராஜம் கிருஷ்ணன் (1973) · க. த. திருநாவுக்கரசு (1974) · ஆர். தண்டாயுதம் (1975) ·

1976 - 2000
இந்திரா பார்த்தசாரதி (1977) · வல்லிக்கண்ணன் (1978) · தி. ஜானகிராமன் (1979) · கண்ணதாசன் (1980) · மா. ராமலிங்கம் (1981) · பி. எஸ். ராமையா (1982) · தொ. மு. சிதம்பர ரகுநாதன் (1983) · லட்சுமி திரிபுரசுந்தரி (1984) · அ. ச. ஞானசம்பந்தன் (1985) · க. நா. சுப்பிரமணியம் (1986) · ஆதவன் (1987) · வா. செ. குழந்தைசாமி (1988) · லா. ச. ராமாமிர்தம் (1989) · சு. சமுத்திரம் (1990) · கி. ராஜநாராயணன் (1991) · கோவி. மணிசேகரன் (1992) · எம். வி. வெங்கட்ராம் (1993) · பொன்னீலன் (1994) · பிரபஞ்சன் (1995) · அசோகமித்ரன் (1996) · தோப்பில் முகமது மீரான் (1997) · சா. கந்தசாமி (1998) · அப்துல் ரகுமான் (1999) · தி. க. சிவசங்கரன் (2000)

2001 முதல்
சி. சு. செல்லப்பா (2001) · சிற்பி பாலசுப்ரமணியம் (2002) · வைரமுத்து (2003) · ஈரோடு தமிழன்பன் (2004) · ஜி. திலகவதி (2005) · மு.மேத்தா (2006) · நீல. பத்மநாபன் (2007) மேலாண்மை பொன்னுசாமி (2008) · புவியரசு (2009) · நாஞ்சில் நாடன் (2010) · சு. வெங்கடேசன் (2011) · டேனியல் செல்வராஜ் (2012) · ஜோ டி குரூஸ் (2013) · பூமணி (2014) · ஆ. மாதவன் (2015) · வண்ணதாசன் (2016) · இன்குலாப் (2017) · எஸ். ராமகிருஷ்ணன் (2018)

எழுதியவர் : Howling Pixel (3-Jun-19, 5:26 pm)
பார்வை : 1497

சிறந்த கட்டுரைகள்

மேலே