உன்னை தேடி

என்னுள் தொலைந்த பழைய கண்ணாடியின் நகல்கள் இன்று உன்னால் பிரதிபலித்தது..!
உன்னோடு தருணித்த கணங்கள் என் முன் ஜென்ம தேடல்களின் முகவரியை மீட்டு வரும் பக்கங்கள்..!
உன்னோடு என்றால் வாழ்க்கை ஒருமுறையா என்ற துக்கங்களே கண்முன் கதை பேசிடும்..!
என் வழி நெடுகிலும் கனவுகள் நிறைய.., விழிகள் மட்டும் வினவும் உன் சுவடுகளின் அடையாளம்..!

எழுதியவர் : SARANYA D (5-Jun-19, 12:04 am)
சேர்த்தது : சரண்யா கவிமலர்
Tanglish : unnai thedi
பார்வை : 522

மேலே