முதுமொழிக் காஞ்சி 79

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
பாரம்வெய் யோர்க்குப் பாத்தூண் எளிது. 9

- எளிய பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால், பிறர் பாரத்தைத் தாங்குதலை விரும்புவார்க்குப் பகுத்துண்டல் எளிது.

'பெருமையை விரும்பினார்க்கு' என்றும் பிரதி பேதம் உண்டு.

பதவுரை: பாத்தூண் - தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல்களுக்குப் பகுத்துண்ணுதல்

பாத்தூண் (பாத்து + ஊண். பாத்து - பகுத்து).

'தங்குறைதீர் வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம்
வெங்குறைதீர்க் கிற்பார் விழுமியோர்' - நன்னெறி.

ஆதலால் பகுத்துண்டல் அவர்க்கு எளிதென்பதாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Jun-19, 8:39 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 39

மேலே