நட்பு

நட்பு

என்னை பிரிந்து
சென்ற நண்பா
நிச்சயம் கோபம்
இல்லை உன்னிடம்
யாரோ செய்த சதி
இன்று நாம் பிரிந்துள்ளோம்
மிகபெரிய வருத்தம் தான்
என்ன செய்வது
காலம் செய்த கோலமா
அல்லது சந்தேகம்
என்ற சாக்கடை
உன்னுள் புகுந்து விட்டதா
தெரியவில்லை
நீ அப்படி பட்டவன் இல்லை
நாம் பிரியும்போது
நீ கூறிய வார்த்தைகள்
என் நெஞ்சை ஈட்டியால் கூத்தியது . மனம் வலிக்கிறது.
வார்த்தைகளை கொட்டிவிட்டாய் ,
அதை எந்த நாளும் எடுக்க முடியாது.
என் மனக்காயம் ஆறுமா? காலம் தான் பதில் சொல்லும்.
நீ சென்ற புது நட்பில்
எதாவது பாதிப்பு, பிரச்சனை இருக்குமானால்,
தயங்காமல் ஒரு சின்ன சமிக்கை கொடு, உடனே உன்னை
எந்த நிலையிலும் என் உயிரை கொடுத்து காப்பேன்.
இன்று நீ என்னை வெறுத்தாலும் ஒரு நாள் என்னை நிச்சயம் அழைப்பாய் .
இதை நான் திமிரில் கூறவில்லை.
நம் ஆரம்ப கால
நட்பு மீது உள்ள நம்பிக்கையில் சொல்கிறேன்.
உனக்காக,
உன் அன்புக்கு
ஏங்கும் உன் பழைய நண்பன்.
- பாலு.

எழுதியவர் : பாலு (5-Jun-19, 9:09 pm)
Tanglish : natpu
பார்வை : 1608

மேலே